Showing posts with label பிராமணர். Show all posts
Showing posts with label பிராமணர். Show all posts

Tuesday, March 12, 2013

தஞ்சைக்குள் நஞ்சா ?

ஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.

 

வானமோ பொய்த்தது; கர்நாடகமோ கடைக்கண் மூடியது; வந்ததோ வறட்சி. தொடர்வதோ தற்கொலைகள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் தற்கொலைகளின் ஆரம்பக்கட்ட அறிகுறி காவிரிப் படுகையில் தென்படுகிறது. இதில், பொன்னியின் செல்விக்கு (!) ( செல்வி.ஜெயலலிதா-வாம் ) மட்டும் குறைச்சல் இல்லை. ஏற்கனவே ஈழத்தை வீட்டு பீரோவில் வெச்சு இருக்காங்க. இன்னிக்கோ நாளைக்கோ பீரோவை திறந்து, எடுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.


இப்படி ஏற்கனவே தொல்லையில் துவளும் தஞ்சையில் மற்றொரு பாதகமாக பேரிடியொன்று வந்து இறங்குகிறது.

ஆம் ! அக்டோபஸ் வருகிறது ... ஜாதீ என்னும் ஆக்டோபஸ் வருகிறது.

தோ ஜாதீ புதிதாக தஞ்சைக்குள் நுழைய வரவில்லை. ஏற்கனவே இருக்கிற ஜாதீகளை ஒன்றிணைக்க வருகிறது. தஞ்சைக்குள் பெருவாரியாக இருக்கும் ஜாதீ கட்சிகள் முக்குலத்தோர் கட்சிகளே. அதாவது, கள்ளர், தேவர், மறவர் போன்றவை. இவர்கள் தஞ்சை கிராமங்களில் செய்த அட்டுழியங்கள் எண்ணிலடங்கா. 

தெருவுக்குள் ஆதி திராவிடர்கள் செருப்பு போடக் கூடாது என்றவர்கள். தோளில் துண்டுப் போடக் கூடாது என்றவர்கள். சைக்கிளை தெருவில் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியவர்கள்; ஆதி திராவிடர் தெரு வழியாக வரும் குழாயில், தண்ணீர் பிடிப்பது இழுக்கு என்று கருதுபவர்கள். ஆதி திராவிடர்களை கொச்சைப் படுத்திப் இழிவாய் பேசுவது; கட்டி வைத்து அடிப்பது போன்றவற்றை செய்த யோக்கியவான்கள் தான் இந்த முக்குலத்தோர். மறுக்க முடியுமா ?


இப்படி ஆதிக்கம் செய்தவர்கள் இன்றைய தேதியில், ராஜ ராஜ சோழனை தங்கள் முன்னோர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் 'மனு சாஸ்திர' அடிப்படையில் நீதி பரி பாலனம் செய்யப்பட்டது. அந்த மனு சாஸ்திர அடிப்படையில் ஆதி திராவிடர்கள் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரி என்று ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். இன்றைக்கும் இந்த பிரிவினையை அனைத்து கிராமங்களிலும் காணலாம்.

மிழ்நாட்டில் ஆதி திராவிடர் நிலை இவ்வாறாகத்தான் இருக்கிறது :

Percentage to Total Workers ( தமிழகம் முழுதும் )   
 i. Cultivators (  விவசாயிகள் ) - 10.2 %
 ii. Agricultural Labourers ( விவசாயத் தொழிலாளர்கள் ) - 58.5 %
 iii. Household Industry Workers ( வீட்டு வேலைத் தொழிலாளர்கள் ) 2.3 %
 iv. Other Workers ( இதர வேலையாட்கள் ) - 29.0%

தஞ்சை மாவட்டத்தில் புள்ளி விவரம் இவ்வாறாகக் கூறுகிறது.
தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஆதி திராவிடர் - 18%
தஞ்சையில் மொத்தமாக கல்வி பெற்றோர் - 75.5% 
கல்வி அறிவு பெற்ற  ஆதி திராவிடர்கள் - 64.1%

ஆதாரம் : http://www.tn.gov.in/deptst/ADIDRAVIDARANDTRIALWELFARE.pdf

இந்த புள்ளி விவரம் என்ன புரிய வைக்கிறது என்றால்; இன்னும் கல்விக் கண் தஞ்சையில் முழுமையாக இல்லை.

பாதிக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் விவசாயத் தொழிலாளர்கள். 29 விழுக்காட்டினர் இதர வேலையாட்களாக இருக்கிறார்கள். அது என்ன இதர  வேலையாட்கள்? தெருக் கூட்டுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், மலம் அள்ளுபவர்கள். அவர்கள் என்ன விரும்பியா செய்கிறார்கள்? இல்லை. இந்த பாழாய்ப்போன பார்ப்பனீய இந்து சமூகம் திணித்தது. ஏன் என்று கேட்டால்? 'முற்பிறவி வினை' என்று காதில் பூ சுத்துகிறார்கள் . 'தலை விதி' என்று வாய் கிழியப் பேசுகிறார்கள்.

நம் கேள்வி இதுதான்:
இந்த 'முற்பிறவி வினை', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விழ மாட்டேங்கிறது? இந்த 'தலை விதி', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விடிய மாட்டேன்கிறது ?


இன்றைக்கு இதே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த படித்த இளைஞர்கள் என்னதான் வெளி நாடுகளில் வசித்தாலும்,  தாங்கள் ஏதோ உயர்ந்த ஜாதி எனும் எண்ணம் கொண்டவராகவோ; தங்கள் ஜாதி, பெருமை வாய்ந்தது எனும் என்ணம் கொண்டவராகவோ; தங்கள் சுய ஜாதி அபிமானம் கொண்டவராகவோ எண்ணிக் கொண்டோ - தங்களின் பெயரின் பின்னால் 
சோழகர் என்றோ , மண்கொண்டார்  என்றோ, தஞ்ச்சிராயர் என்றோ, சேனை நாட்டார் என்றோ இன்னும் இத்யாதி இத்யாதி ஜாதி வாலைப் போட்டுக் கொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள். 

தெரியாமல் போடுகிறவர்கள் திருந்திக் கொள்வார்கள். தெரிந்தே போடுவோர், 'அடடா! மனித குல சமத்துவத்திற்கு எதிராக இப்படி தவறாக  நடந்து கொண்டோமே' என்று வருந்திக் கொள்வார்கள்.

படித்துப் பட்டம் பெற்று வேலையில் அமர்ந்து  சாதிப்பார்கள்  என்றுப் பார்த்தால், ஜாதீ அல்லவா பார்த்துக் கொண்டு  இருக்கிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த ஜாதீக்களை ஒருங்கிணைக்க தஞ்சைக்குள் ஓர் ஆக்டோபஸ் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆக்டோபசின் பெயர் "ராம தாஸ்". எப்படி, கதைப்படி ராமன் நம்மை எல்லாம் "சூத்திரன்" என்றும் "பஞ்சமன்" என்றும் நிலை நிறுத்த எண்ணினானோ அதே போல இந்த ராம தாஸ் செய்ய முனைகிறார்.ராமனின் தாசன் அல்லவா ?

முக்குலத்தோர்(கள்ளர் , தேவர், மறவர் ) யோக்கியமானவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருப்பதாகத் தாங்களே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இவர்கள் வாங்கும் நிலத்துக்கு பூமி பூஜை செய்ய பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்; இவர்கள் கிரஹப் பிரவேசம் எனும் பெயரில் பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்;இவர்கள் வீட்டுத் திருமணத்தை பார்ப்பன புரோகிதர் நடத்தி வைப்பதும்; பெற்றோருக்கு திதி   கொடுக்கும் போது பார்ப்பன புரோகிதனை அழைத்து தங்கள் சுயமரியாதையை இழப்பதும் இதே முக்குலத்தோர்தான்.இந்தச் சுயமரியாதை சிங்கங்கள் கோவிலில் இன்றளவும் கருவறைக்குள் நுழைய முடியாது. அவர்களின் பிரத்யேக  ஜாதீ கோவிலில் வேண்டுமானால் போகலாம். மறுக்க முடியுமா?

 
"னைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆக முடியாதுடா அம்பி. அது பிரம்மாவின் முகத்தில் பிறந்தவாள் மட்டும்தான் செய்யணும். புரியுதோ இல்லியோ நோக்கு. அபிஷ்டு அபிஷ்டு !! பிராமனாள் எல்லாம் கடவுளுக்கும் மேலானவாடா. வேதத்தை படிக்கலியோ என்னோ ?! ஓ ! வேதத்தை நீர் படித்தா காதில ஈயத்த ஊத்த சொல்லின்னா எழுதி வெச்சிருக்கோம். சித்தே மறந்துட்டேண்டா அம்பி !! 

நன்னா ஞாபகம் வெச்சுக்கோ - எங்க்களவாவ வெச்சுதான் நீங்கோ பூமி பூஜை பண்ணனும், வீடு குடி போகனும், திருமணம் செய்யணும், சாந்தி முஹுர்த்தம் செய்யணும், திதி செய்யணும்; ஆனா, நன்னா ஞாபகம் வெச்சுக்கோ இந்த கருவறைகுள்ள மட்டும் வரப்டாது. ஏன்  ப்டாது எதுக்கு ப்டாதுன்னு கேக்கப் புடாது!

கலைஞர், உங்களவா சுயமரியாதை அடையனும்ன்னு,  'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்' ரெண்டு தடவ சட்டமா கொண்டு வந்தார். விட்டுவோமா ? இல்ல அவ்வளவு சீக்கிரத்தில் அத விட்டுடுவோமான்னுதான் கேட்கிறேன். 

உங்களவா முதுகில பாரு. எங்களவா முதுகில பாரு. வித்தியாசம் தெரியுதா ? ம்ம்ம்.. ஆமாம்! நாங்கள் பூனூல் போட்டிண்டு இருக்கோம். ஏன் தெரியுமா? நாங்கள் துவிஜாதிகள் ( இரு பிறப்பாளர்கள்  ). சுத்திராளுக்கு  பூணூல் போட உரிமை இல்லைடா அம்பி! மனு சாஸ்திரம் சொல்லுது.

ஆனாலும் நீங்களும் நாங்களும் இந்து. மறந்து விடாதீர்கள்; மறந்தும் இருந்து விடாதீர்கள்; நாமெல்லாம் இந்து; எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

லோகத்தில் பொறாமை அதிகரிச்சுட்டே இருக்கு. வேனும்னா பாரு, இப்படி சுயமரியாதை-கியமரியாதை உரிமை-கிரிமை ஏதானும் கேட்டா,  எங்கள் காலில் விழுகிற உங்களவாவே உங்கள எதிர்க்கிறாளா இல்லையா பாரு. பத்திரிகை ( தினமலர், தினமணி, துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி ) எல்லாம் எங்களவா கைய்லன்னா இருக்கு.

இவாளுக்கு வியாக்யானம் சொல்லியே பிராணனை போகுதே !!"

நி
ற்
ப்படி இந்த முக்குலத்தோர் தங்கள் சுயமரியாதையை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அவர்களும் ஆதி திராவிடர்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைக்கக் கூடாது.

தந்தை பெரியார் ஒழுக்கம் என்பதாகக் கூறியது எவ்வளவு ஆழமானது:

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

இந்து மதத்தின் படியே இந்த முக்குலத்தோர் என்போர் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? சூத்திரன் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இந்து மதத்தின் படியே ஆதி திராவிடர்கள் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? பஞ்சமர் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இருவர் மேலும் இந்து மதத்தின் வர்னாஸ்ரம இழிவுதானே தொக்கி நிற்கிறது ?

சூத்திரன், பஞ்சமர் என்ற சொல் வெருக்கத்தக்கதாக இருந்தாலும், 
பஞ்சமர் என்ற சொல்லைக் காட்டிலும் சூத்திரன் என்ற சொல் அல்லவா மகா மட்டமான கேவலமான இழிவான சொல். மறுக்க முடியுமா?

பார்ப்பனர் அல்லாத அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறது. திராவிடர், ஆதி திராவிடர் இருவருக்குமே இட ஒதுக்கீடு இருக்கிறது. இருவருமே பார்பனீயத்தால் பாதிக்கப்பட்ட சமுகம். இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி திராவிடருக்கும் இருக்கிறது, ஆதி திராவிடருக்கும் இருக்கிறது. 

ஆனாலும் , வழக்கம் போலவே ஆதி திராவிடர் கல்விப் பெற்றாலும், பொருளாதார மேம்பாடு அடைந்தாலும் பிற்படுத்தப் பட்டோர்க்கு பொறாமைத் தீ பொங்கி வழிகிறது. எப்படி என்றால்? பார்ப்பனர்களுக்குப் பொத்துக் கொண்டு வருமே அதைவிட கொஞ்சம் குறைவாக பொத்துக் கொண்டு வருகிறது.

ஏற்கனவே இருக்கிற இழிவு பத்தாது என்று, இழிவு++ ஆக  ராமதாஸ் அக்டோபசை விட்டால் என்ன ஆகும்?

வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்பானேன்?


முறையாக காவிரியில் தண்ணீர் கிடைத்து நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய தஞ்சையில் ஜாதீ எனும் நஞ்சையா விதைப்பது?

உண்மையுடன் 
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Tuesday, April 17, 2012

நகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் !


சி காலங்களுக்கு முன் வேலை இல்லாத காலங்களில், அதுவும் வேலை தேடுவதையே வேலையாக கொண்ட காலங்களில், வேலை தேடுதல் முடிந்த பிறகு, நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்றிருந்த சார்லி சாப்ளின் தொகுப்புகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

சாப்ளின் திரைப்படங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. அவருடைய பல படங்களில், சாப்ளின் வேலை வெட்டி இல்லாத, வேலை தேடும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கதாபாத்திரங்களே நிறைய சித்தரிக்க பட்டுள்ளன. பின்னே மகிழ்ச்சிக்கு என்ன குறைச்சல். நம் இனமடா இவன் !

நடிப்பில் சிகரம் தொட்டு, அன்பில் மக்கள் மனம் கவர்ந்து சாதனை படைத்தவர் சாப்ளின்.

ஒருவன் வாய் திறக்காமலே பேச முடியுமா. முடியும் என்பதற்கு சாப்ளினே சாட்சி. வாய் திறந்து பேசாமலே அன்பு, பாசம், ஆனந்தம், அசூயை, பயம், கோபம் எனவாக பல உணர்ச்சிகளையும் நடிப்பால் புரிய வைப்பார். புரிய வைப்பார் என்பதை காட்டிலும் உணர வைப்பார் என்பது இன்னும் பொருந்தும்.

மேற்பரப்பில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பாங்கு, ஆனாலும் ஆழத்தில் அன்பிற்கு ஏங்கும் குணமாகவும், மெல்லிய சோகமும் பிணைக்க பட்டிருக்கும் அவர் நடிப்பில்.

'தி கிரேட் டிக்டேடர்' என்ற திரைப் படத்தில், ஹிட்லர் போன்று தோற்றம் அளிக்கும் கதாபாத்திரத்தில், பட முடிவில் நீண்ட நேரம், உலக அமைதிக்கான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசுவார். அதை பார்த்தால் நம் உடல் நடு நடுங்கும். என்ன உணர்ச்சி மிகுந்த ஆழமான அர்த்தமான பேச்சு!


தைக் கேட்டவுடன், இந்து மதத்தில் உயர் ஜாதி பார்ப்பனர்களால் ( பிராமணர்களால் ) ஏற்படுத்தப்பட்ட ஜாதி, சூத்திரன், பஞ்சமன் என்கிற இழிவில் இருந்து நம் திராவிட மக்கள் எப்போது விடுதலை அடைவோம்? எனும் கேள்வி தோன்றுகிறது. இழிவு நீங்க வேண்டும் என்றால், சும்மா இருந்தால் இழிவு நீங்காது. தந்தை பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவை, தந்தை பெரியார் ஊட்டிய மான உணர்வை பெற வேண்டும். நாமெல்லாம் அடிமை, தாசி புத்திரர்கள் என்று நம்மை எழுதி வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது ? யாருக்குத்தான் தன்மானம் உரைக்காது ? நம் சமூக விடுதலைக்காக பார்ப்பனீயத்திற்கு எதிரான போர் இன்றும் நடைபெறுகிறதா இல்லையா?

நி
ற்
க.

நாம் ஒரு கூட்டத்திற்கோ, விருது வழங்கும் விழாவிற்கோ செல்லும் போது பார்த்தோமேயானால், மக்கள் பல வகையில் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் தருவார்கள்.
சிலர், இரு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி ஆரவாரம் செய்வார்கள்; சிலரோ, கை கட்டியபடியே விரல்களால் தங்கள் கைகளை தட்டிப் பாராட்டுவார்கள்;
சிலரோ, உட்கார்ந்து கொண்டே கைகளால் தங்கள் தொடையை தட்டுவார்கள்; அப்படிப்பட்டவர்கள், அருகில் இருப்பவர் தொடையை தட்டி மகிழ்ச்சி அடையாதவரை நாமும் மகிழ்ச்சியே அடைகின்றோம் !

தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா பேசுகின்றார். பல அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் பராக்கு பார்த்து கொண்டும் பக்கத்தில் பேசி கொண்டும் இருக்கின்றார்கள்; முதல்வர் ஜெயலலிதா கூறுகின்றார், "இனி டாஸ்மாக் கடைகள் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும் என்பது உயர்த்த ப்பட்டு, இரவு 12 மணி வரை திறந்திருக்கும்". உடனே மேஜையை தட்டி தட்டி, கட்சி பேதம் இன்றி ஆரவாரம் செய்கின்றனர். இதுவும் ஒரு வகையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

இப்படியாக மகிழ்ச்சியையும், பாராட்டையும் பல விதங்களில் காட்டலாம்.

உலகின் மிகச் சிறந்த திரை கலைஞர்களுக்கு தரப்படும், உயரிய விருதாய் கருதப்படும் ஆஸ்கார் விழாவில், சாப்ளினுக்கு honorary ஆஸ்கார் தரப் பட்டது. அப்போது அனைத்து மக்களும் தங்கள் மரியாதையையும், மகிழ்ச்சியையும், பாராட்டையும், உங்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று அனைத்தையும் கூறும் விதமாய், அவ்விழா வரலாற்றில் கண்டிராத அளவிற்கு, அதிக நேர standing ovation பெற்ற மாபெரும் நடிகர் சாப்ளின்.

முன்பு ஒரு முறை, ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்த் அவர்களை குறிப்பிட்டு "அவர் சட்டசபைக்கு குடித்து விட்டு வருகின்றார்" என்கின்றார். குடித்து விட்டு வந்ததாக கூறப் படுபவரோ, "இவர் தான் பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தாரா?" என்கின்றார்அவ்ளோதான் பார்டெர் லைன். இதற்கு மேலே, இவரும் அவரைப் பற்றி பேச மாட்டார்; அவரும் இவரைக் கண்டு கொள்ள மாட்டார்.
அதுதான் ஒரு வாரத்திற்கான செய்தி (விளம்பரம்) கிடைத்து விட்டதே. இதை சுய விளம்பரம் என்று ச்சீப்-ஆக எண்ணி விடக் கூடாது. இவர் அவருக்கும், அவர் இவருக்கும், அர்ச்சனைகளால் கொடுக்கும் விளம்பரம். மக்கள் அவர்களை மறந்து விட கூடாதாம். இவர்கள் மட்டும் மக்களை மறந்து விடலாம். மாக்கள்...!

இப்படியாக அரசியல்வாதிகள் குடிமகன்களை பற்றி கவலை படாமல் குடி காரர்களைப் பற்றியே கவலை படுகின்றனர்இப்படிப் பட்ட அரசியல் வாதிகளும் நடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள். என்ன? அவர்கள் மகா கலைஞன் சாப்ளின் போல மக்கள் மனதை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திடும் அளவுக்கு நடிக்கத் தெரியவில்லை.

நம் குழந்தைகள் இருக்கின்றார்களே, அவர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள் ஆகவும் எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றலுடன் இருக்கின்றார்கள். குழந்தைகள் கேட்கும் கேள்விகள் பலவற்றிற்கு நம்மால் பதிலே சொல்ல முடியாது. இத்தனைக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு காரணம், நாம் முன் எப்போதோ கொடுத்த அரை வேக்காட்டு விளக்கமாக இருக்கக் கூடும்.
இப்படித் தான் ஒரு தந்தை தன் மகனிடம், "மனுஷங்க செத்தவுடன் திரும்பி இந்த Earth- பொறப்பாங்க" அப்டினார். அந்த குழந்தை ஆச்சர்யமாய் "அப்டியா!" என்று ஆவென்று கேட்டு கொண்டு இருந்தது. தந்தைக்கோ பெருமிதம், தம் மகன் ஆவென வாய் திறந்து கேட்டு கொண்டு இருந்தானே.
குழந்தை சற்றே வளர்ந்தது. புத்தகம் படித்து கொண்டு இருந்த குழந்தைக்கு ஒரு சந்தேகம்

அப்பாவை கூப்பிட்டு "அப்பா 1930- இந்தியாவில் 30 க்ரோர் பீபிள் தான் இருந்திச்சு இப்போ எப்டி 120 க்ரோர் பீபிள் ஆச்சுஎப்டிப்பா செத்தவங்க நாலு நாலா பொறந்தாங்க ?"

இப்போது அப்பா ஆவென பார்த்து கொண்டு இருந்தார். குழந்தையின் பகுத்தறிவுக்கு முன்னால் 'நம்பிக்கை' கோஷ்டிகளால் தாக்குப் பிடிக்க முடியுமா? அப்பா கடிகாரத்தை பார்த்தார்சுற்றும் முற்றும் பார்த்தார், "தம்பி நேரம் ஆயிடிச்சு பாருஇன்னிக்கு படிச்சது போதும்வா போய் படுக்கலாம்."

இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான குழந்தையாகத்தான் இருந்தார் சாப்ளின் தன் சிறு வயதில். அவர் அம்மா ஒரு மேடையில் பாடி கொண்டு இருந்தபோது சில தடங்கல்களால் அவரால் பாட முடியவில்லை. உடனே கூட்டத்தினர் கூச்சலிட்டனர். உடனே சாப்ளின் தன் அம்மா பாட வேண்டிய இடத்தில மேடையேறி மழலைக் குரலில் பாடினார். கூட்டம் மகிழ்ச்சி அடைந்தது; கூட்டத்தினர் மகிழ்ச்சியாய் காசுகளைத் தூக்கி மேடையில் போட்டனர். சாப்ளின் பாடுவதை நிறுத்தி விட்டார். உடனே எல்லோரும் "பாடு பாடு" என்றனர். சாப்ளின் மழலையாய் "காச எடுத்து கிட்டு அப்புறம் பாடுறேன்" என்றார். கூட்டத்தினர் சிரித்து விட்டனர்.

பார்த்த சாப்ளினின் திரைப்பட வரிசையில், ஒரு படத்தை தவிர்த்து, அனைத்து திரைப் படங்களிலும் அவர் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அதே போல் சொல்லி வைத்தார் போல் எல்லா படத்திலும் ஏதாவதொரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்.

ஒரு படத்தை தவிர்த்து என்று சொன்னோமே, அந்த படத்தில் உள்ள விசேஷம் என்ன என்றால், அதில் வரிசையாக பல பெண்களை திருமணம் செய்து கொள்ளுகின்றார். ஆனால் எந்த பெண்ணையும் காதல் செய்யவும் மாட்டார். என்ன ஒரு முரண்பாடு. முரண்பட்ட படத்தின் பெயர் Monseiur Verdoux.

ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் சாப்ளின் இறப்பதாக திரைக்கதை அமைந்திருகின்றது. அதுவும் அந்த படத்தில் அவர் ஒரு மேடைக் கலைஞனாக இருந்து தன் கஷ்டங்களை மறைத்து, வலியைத் தெரிய விடாமல், மக்களை மகிழ்ச்சி அடைய செய்து விட்டு மேடைக் கச்சேரியை முடித்து விட்டு வந்து, அடுத்ததாக, தன் காதலியின் மேடைக் கச்சேரியை பார்த்து கொண்டே உயிர் விடுகின்றார். படத்தின் பெயர் Limelight.

சாப்ளின் ஒரு நடிப்பு வங்கி, ஆனாலும் இந்த வங்கி இறக்கும் தருவாய் வரையிலும் திவால் ஆனதில்லை. சாப்ளின், வங்கிகளுக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து-இல் தன் இறுதி நாட்களை கழித்தார். பின் அங்கேயே காலமடைந்தார்.

சாப்ளினின் முத்தான மூன்று படங்கள்
1. THE KID
2. CITYLIGHTS
3. THE CIRCUS
நேரம் கிடைத்தால் இந்த படங்களை பார்க்கலாம். அதற்காக வேலையை விட்டு விட்டு VCD வாங்கிப் பார்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை. சில சாப்ளின் படங்கள் பார்த்து விட்டு குழந்தைகளுடன் போய் விளையாடிப் பாருங்கள், குழந்தைகள் உங்களோடு மிக குதூகலமாக விளையாடுவார்கள். அது சாப்ளினின் தாக்கம்

சார்லி சாப்ளின் முழு திரைப்பட தொகுப்பும் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன். பர்மா பஜாரில் சொல்லி வைத்து இருக்கிறேன். இப்போது தான் COPY போட ஆரம்பித்து இருகிறார்களாம், "அபிஷ்டு.. அதுக்குள்ள நோக்கு என்ன அவசரம்.. இப்போதானே Copy போட ஆரம்பிச்சோம்.. சித்தெ பொறுத்து ஒரு வாரம் கழிச்சு வந்தேள்னா ரெடியா இருக்காதோன்னோ ? பரவால்ல வந்ததுதான் வந்தே 2000 ரூ அட்வான்ஸ் கொடுத்திட்டு போ. அடுத்த வாரம் மீதிய கொடுத்திட்டு CD-ய வாங்கின்டுப் போ. எல்லாம் ஏழுமலையான் கிருபடா அம்பி. ரெய்டு அது இதுன்னெல்லாம் நோக்கு ஒரு கவலையும் வரப்புடாது. கோட்டையே நம்ம கையில. புரிஞ்சுதோ ?!" என்கின்றார்.

திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்




Thursday, April 12, 2012

பேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி

தம் மனிதனை பண்படுத்தித் இருக்கிறதா அல்லது நாத்திகம் மனிதனை பண்படுத்தி இருக்கிறதா? மதம் காட்டுமிராண்டித்தனமா இல்லையா? நாத்திகம் மனிதநேயமா இல்லையா? இந்தக் கேள்விகளை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ந்தியாவில் இந்து இஸ்லாமிய மக்களின் தொகையயை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
விகிதாச்சாரப்படி இந்துக்கள் சிறும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:
  1. காஷ்மீர்
  2. பஞ்சாப்
  3. அருனாச்சல பிரதேசம்
  4. நாகாலாந்த்
  5. மெகாலயா 
  6. மிசோரம்
  7. லட்சத் தீவுகள்
ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் இந்துக்களே பெரும்பான்மையினர்.

விகிதாச்சாரப்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. காஷ்மீர்
  2. லட்சத் தீவுகள்
விகிதாச்சாரப்படி கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. நாகாலாந்த்
  2. மெகாலயா 

ந்தியாவில் மதக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை இங்கே படமாகக் காணலாம் : 

மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
இந்துக்கள் பெரும்பான்மையான அல்லது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் மதக் கலவரங்கள் நடந்துள்ளன, அமைதியின்மை, மனித உயிரிழப்பு.

ந்துத் தீவிரவாதிகள் முன்னிறுத்தும் பாரதமாதாவை இங்கே படமாகக் காணலாம் :
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், பாரதமாதாவின் திருப்பாதம் தமிழகத்தின் உள்ளே இல்லை. அந்த வகையில், ஒரு குறியீடு போலவே தமிழகம் அமைதி நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

ந்தியாவில் நக்சலைட்கள் பரவியுள்ள மாநிலங்களை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், இந்துக்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் நக்சல் போராளிகள் போராடுகின்றனர். இந்த விஷயத்திலும், தமிழகம் அமைதியான நிலையில் இருப்பதை காணமுடிகிறதா இல்லையா?

வை எல்லாவற்றிலிருந்தும் புரிவது என்ன?  
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நாத்திகர்கள் அதிகம்.  நாத்திகர்கள் எல்லா மதத்தையும் கருத்துக்களால் எதிர்ப்பவர்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்து என்று எந்த மதத்தையும் கருத்துக் கணைகளால் குடைந்து எடுப்பவர்கள் நாத்திகர்கள். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள்.

மண் பண்பட இயற்கை உரம் தேவை; அதுபோல, மனிதன் பண்பட பெரியார் கொள்கைகள் தேவை. பெரியார் கொள்கைகள் என்றவுடனே 'கடவுள் இல்லை' என்பதையோ, 'பிராமணர்களை எதிர்ப்பதையோ' என்பதாக எண்ணிக் கொண்டால், தந்தை பெரியாரை பற்றி முழுப் புரிதல் நம்மிடம் குறைவாக இருப்பதாகத்தான் பொருள்.  

ந்தை பெரியார் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார் சாஸ்திர இதிகாசம் புராணம் போன்றவற்றை எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார்  பார்ப்பனர்களை (பிராமணர்) எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ? 
தந்தை பெரியார் 'கடவுள் இல்லை' என்றார்களே, ஏன் 'கடவுள் இல்லை' என்றார்கள் ? 


திராவிடச் சமூகத்தில் உள்ள சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்ற இழிவுகளுக்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். இந்த அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டிருப்பது இந்து மதம் என்பதை புரிந்து கொண்டார்கள். 


ந்து மதத்துக்கு ஆதாரம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். 
இந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை, சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றா ஆதாரங்கள் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

ந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் எதற்காக? இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். 
இந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றவை பார்ப்பனர்களை (பிராமணர்) உயர்நிலையில் வைக்கவே இருப்பதை ஆராய்ந்தும், நடைமுறையிலும் அவை இருப்பதை கண்டுப்பிடிக்கிறார்கள்.


டுத்து, இந்த பார்ப்பனர்கள் (பிராமணர்) எப்படி உயர் நிலையில் இருந்துக்கொண்டு ஏணைய பெரும்பான்மையினரான திராவிட மக்களுக்கு சமுதாய இழிவை ஏற்படுத்துகிறார்கள்? என்று ஆராய்கிறார்கள். பார்ப்பனர்கள் (பிராமணர்), தாங்கள் கடவுளின் படைப்பு, கடவுளால் உயர் ஜாதியினராகப் பிறப்பிக்கப் பட்டவர்கள் என்று கூறுவதையும் அதனை திராவிடர்கள் ஏற்றுக்கொள்வதையும் நடைமுறையில் கண்டுப்பிடிக்கிறார்கள்.




ரி, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம். சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்றவற்றை களையவேண்டுமானால், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த இந்து மதத்திற்கு ஆதாரமான சாஸ்திர இதிகாச புராணங்களை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த சாஸ்திர இதிகாச புராணங்கள் தூக்கிப்பிடிக்கும்  பார்ப்பனர்களையும் (பிராமணர்) எதிர்த்தார். அதோடும் விடவில்லை அந்த பார்ப்பனர் (பிராமணர்) கூறிக்கொள்ளும் கடவுளின் படைப்பு என்பதை தகர்க்க கடவுளை நிராகரித்தார்கள்.


இவ்வளவு ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரங்களுக்கும் அனுபவங்களுக்குப் பிறகுதான் தந்தை பெரியார் கூறினார்கள் :
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி."


ஆனபோதிலும், 'கடவுள் இல்லை' என்ற தந்தை பெரியாரைத்தான் திராவிடத் தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்? தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்த பழம். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  ஆழமாக விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள். ஆகையால்தான், நாம் பேரிடர் தவிர்த்த திராவிடர்களாக உலா வருகிறோம்.

வாழ்க பெரியார் - வளர்க பகுத்தறிவு.

--
உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Tuesday, April 3, 2012

ராம் செத்தா'ராம்'



ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு. கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்; "தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்'" என்று. அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவிப் பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

இந்து மதத்தின் மனு சாஸ்திரத்தில் உள்ளபடி  வர்ணாஸ்ரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
1) முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் ஜாதியாம் :(
2) தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் ஜாதியாம் :(
3) தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் ஜாதியாம் :(
4) காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் ஜாதியாம் :(

இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(
இந்தப் படி நிலைக்கும்  கீழே பெண்கள் எனும் நிலையை கொண்டது இந்து மதம்.

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானாம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றான். எப்படி இருக்கிறது நியாயம்? ராமன் ஏன் கொன்றான் ? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் ஜாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் ஜாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்.

எப்போது சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான் !

திராவிட இயக்கத்தின் பயனால் கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்? என்பதுதான் நமது கேள்வி.

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள்? என்று குறிப்பிடுகிறோம் என்றால் :
- வர்ணாஸ்ரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- ஜாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது தந்தை பெரியார் காண விரும்பிய அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத்தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும். 

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விஹாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதாபாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?



[அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist-டிடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]


ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துதான், இன்றைய தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது.

தந்தை பெரியார், சமூகத்திற்கு தந்த  mutual exclusion semaphore : 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.



[ 'எப்போதுமே தலை விழுந்தால்? அந்த நாணயம், தல அஜித்தின் 'மங்காத்தா' நாணயம்' :) :) ]

புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக, புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது 'Accused ஆச்சாரியார்' சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :) பீராபிஷேகம் செய்யலாம். கல்லை இளநீரிலும் எலுமிச்ச தண்ணியிலும் குளிப்பாட்டலாம்.

வெளிநாட்டுகாரர்கள் கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு பாபர் மசூதியை இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடித்தது காவித் தீவிரவாதமா இல்லையா ?

குத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும்தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா? இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, ஜாதி, மூடப்பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக்கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், ஜாதி, மூடப்பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார்.

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா?!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Wednesday, March 7, 2012

தினமலரே - திராவிடத்தால்தான் வாழ்கிறோம் !


தினமலரில் வெளி வந்த 'திராவிட இயக்க நூற்றாண்டு விழா: தமிழர்கள் எதிர்ப்பு' என்ற செய்தியை படித்தவுடன் முதலில் கோபம் வந்தது. பின்னர் தெளிவு வந்தது.

கோபம் வந்தது - தினமலர் திரிபுவாதம் செய்வதால்.
தெளிவு வந்தது - தந்தை பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவால்.
இருக்காதா பின்னே? தினமலர் மட்டும் தன் திரிபுவாதத்தை வெளிக் காட்டி இருக்காவிட்டால், திராவிடர் எனும் அருஞ்சொற்பொருள் இத்தனை கோடி தமிழ் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமா? ஆகையால், முதலில் தினமலருக்கு நன்றி.
நன்றியை பெற்றுக் கொண்டவர்கள் சில திரிபுவாதங்களுக்கான விளக்கத்தையும் தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

தினமலர் கூறுகிறது : தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் எல்லாம் திராவிட மொழிகள்; அம்மொழி பேசும் மக்கள் திராவிட மக்கள் என்றால், தென்னகத்தில், மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையை ஏற்றது ஏன்?
பதில் கருத்து:
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் தெலுங்கர்; கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் கன்னடர்; மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் மலையாளி; தமிழை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் தமிழர்.
இதில் இருந்து புரிவது என்னவென்றால், சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் திராவிட இன மக்கள் அல்லர். அப்படி என்றால், சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் யார்? அது நம் பிரச்சினை அல்ல. நாம் ஒன்றும் அவர்களுக்கு பெயர் சூட்டவும் விரும்பவில்லை. அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்பவில்லை ?
ஆனால், யாரேனும் நம் மேல் ஆதிக்கம் செலுத்த விழைவார்களேயானால், அவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்ய நேர்ந்து விடுகிறது.இதற்கு, ஆராய்ச்சி செய்பவர் மேல் பாய்ந்து என்ன பயன் ? ஆதிக்கம் செலுத்துபவர் மேல் அல்லவா பாய வேண்டும் ?

தினமலர் செய்தி : தென்னகத்தில், மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையை ஏற்றது ஏன் ?
பதில் கருத்து:
ஒன்றாக இருக்க வேண்டும் என்பது நமது திராவிடர் இனம் சார்ந்த விருப்பம் என்றால், மொழிவாரியாக தனியாக இருப்பது மற்ற மொழிக்காரர்களின் விருப்பமாக இருக்கிறது. இதில் தவறு என்ன ? தமிழர்கள் அனைவரும் சென்று, தெலுங்கரை, கன்னடரை, மலையாளியை கட்டாயம் திராவிடத்தை ஏற்க வேண்டும் என்று எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும். திராவிடம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரானது. இது, திராவிடத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக இருக்கிறதா இல்லையா ?

தினமலர் செய்தி : அப்படி பிரித்தது, மற்ற மொழி பேசும் மக்களின் விருப்பம் என்றால், தெலுங்கு நாடு, கன்னட நாடு, மலையாள நாடு என, மற்ற மாநிலங்கள் பெயர் சூடிக் கொள்ளாத நிலையில், மிச்சமிருந்த சென்னை மாகாணத்துக்கு திராவிட நாடு எனப் பெயர் சூட்டாமல், தமிழ்நாடு என, தி.மு.., பெயர் சூட்டியது ஏன்?
பதில் கருத்து:
இது என்ன கேள்வி என்றே புரியவில்லை. அவரவர், அவரவர் மொழிக்கான நாட்டை ஏற்றுக் கொண்ட பிறகு; அவர்கள் மாநிலத்துக்கு அவர்கள் தாய் மொழியில் விருப்பம் போல் பெயர் வைத்தால் நமக்கென்ன? தெலுங்கர்களை போய், நீங்கள் தெலுங்கு நாடு என்றுதான் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லவா ? கன்னடரை போய், நீங்கள் கன்னட நாடு என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லவா ? மலையாளிகளிடம் போய், நீங்கள் மலையாள நாடு என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லாமல் வேறென்ன ? அப்படி ஆதிக்கம் செய்தால், அது திராவிடம் எனும் கொள்கைக்கு எதிரானது. ஏனென்றால் திராவிடம் என்பது ஆதிக்கத்திற்கு எதிரானது.
திராவிட மொழிகள் தங்களுக்கு என்று மொழிவாரியாக நிலப் பிரிவிணை செய்து கொண்ட பிறகு, தமிழ் மொழியை தாய் மொழியாகப் பேசும் மக்கள் கொண்ட நிலத்துக்கு தமிழ்நாடு என்று வைத்தது சாலப் பொருந்துகிறது. தமிழர்கள் என்றுமே, மூன்று விழுக்காடு பேருக்கு மட்டும் தலைவராக இருந்து கொண்டு 'லோக குரு' ( உலகத்துக்கு குரு ) என்று கூறிப் பிதற்றுவோர் இல்லையே ?!?

தினமலர் செய்தி : அப்படி என்றால், தமிழக மக்கள், திராவிடர்கள் என்ற தங்கள் கொள்கையை, தி.மு..,வே ஏற்கவில்லை என்று தானே பொருள்.
பதில் கருத்து:
தமிழ் மக்கள், தெலுங்கு மக்கள், கன்னட மக்கள், மலையாள மக்கள் ஆகியோர் இனத்தால் திராவிடர் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டு, தமிழ்மொழி பேசும் தமிழக மக்கள் திராவிடர் இன மக்கள் இல்லை என்றால் என்ன குதர்க்கம் இது ?
தமிழ் மக்கள் + தெலுங்கு மக்கள் + கன்னட மக்கள் + மலையாள மக்கள் = திராவிடர் இனம்
அப்படி என்றால் ? தமிழ் மக்கள் திராவிடர் இனத்தில் அடங்குகிறார்களா இல்லையா ?
இதன் நீட்சிக் கேள்வி இதுதான்: சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டிருக்கும் பிராமணர், தங்களின் தாய்மொழியான சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு, திராவிட மொழிகளின் தாய் மொழியான தமிழ் மொழியை தங்கள் பேச்சு மொழியாக ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன ?
அப்படி என்றால்,சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்தான் சிறந்த மொழி என்று ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? பிற மொழி சிறப்பாக இருந்தால் அது நல்லதுதான். ஆனால், எந்த மொழியும் மற்ற மொழியின் மேல் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதுதான் திராவிடத்தின் கொள்கை சாரம். இந்தக் கொள்கை என்ன மின்சாரம் போல் தாக்குகிறதோ ? 26 சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் மொழியில் திணிக்க முயன்றது ஆதிக்கம் அல்லாமல் வேறேன்ன ? இன்றும் கூட கிராமங்களில் வயதானவர்கள் வாயில் வடமொழி எழுத்துக்களான '','', '', '', 'ஶ்ரீ' போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் உச்சரிக்க கடிணமாக இருக்கும்போது; மேலும் 26 சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் மொழியில் திணிக்க முயன்றது எதனால் ? இது ஆதிக்கம் என்றால், அதனைத் தடுக்கப் பயன்பட்ட கொள்கைதான் திராவிடம்.

தினமலர் செய்தி : தமிழகத்தைப் போல், ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற பெயரால், இயக்கங்கள் தலையெடுக்காத நிலையில், யாரும் தங்களை திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளாத நிலையில், தி..,வின் வழி வந்த கட்சிகள் மட்டும் இன்னும், திராவிடர் எனும் அடைமொழியை தூக்கி சுமப்பது ஏன்?
பதில் கருத்து:
தமிழகத்தில், தமிழ் மக்களின் உழைப்பில் கல்லா கட்டும் பத்திரிகைகளுக்கு அடுத்த மாநில மக்கள் மீது எவ்வளவு கரிசனம். திராவிடர் என்பது இனப் பெயர்.
திராவிடமொழிக் குடும்பத்தை சேர்ந்த பிற மொழிகள், இனப் பெயரான 'திராவிடர்' என்பதை பயன்படுத்தவில்லை என்றால், அதை அந்தந்த மொழிக் காரர்களிடம்தான் கேட்க வேண்டும்.
தெலுங்கு சகோதரர்களே, கன்னட சகோதரர்களே, மலையாள சகோதரர்களே: 'நீங்கள் ஏன் திராவிடர் என்ற பெயரை பயன்படுத்தவில்லை' என்று தமிழ்நாட்டில் வெளியாகும் தினமலர் எங்களிடம் கேட்கிறது. தினமலரும் நீங்களும் உங்களுக்கு வசதிப்படும் வேளையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி : திராவிடர் என்ற சொல்லை இன்னும் ஒரு சிலர் தாங்கிப் பிடிக்க காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அதற்கு, பா..., நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கூறிய உதாரணம் பெருமளவு பொருந்துகிறது. "தமிழகத்தில் ஒரு சில பச்சைத் தமிழர்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழர். வைகோ, விஜயகாந்த் இருவரும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்., கண்டியில் பிறந்த மலையாள மொழி பேசுபவர்' என்ற அவரது கூற்றை ஏற்க வேண்டியுள்ளது.
பதில் கருத்து:
உதாரணம் பெருமளவு பொருந்துவதற்கும், அப்படியே பொருந்துவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. கேள்வியிலேயே சில குளறுபடிகள் இருக்கிறது.
இது என்ன கதையாக இருக்கிறது : 'முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழராமே'. அப்போ, கலைஞர் அவர்கள் பிறந்தது எங்கே ? விஜயகாந்த் அவர்கள் பிறந்தது எங்கே ? வைகோ அவர்கள் பிறந்தது எங்கே ? சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதத்தை குறிக்கும், 'வேதா நிலையத்தில்' வசிக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மைசூரில் பிறந்தாலும், தமிழர் என்றே அடையாளப் படுத்தப்படுகிறார். தமிழகத்தில் பிறந்த கலைஞர், விஜயகாந்த், வைகோ போன்றவர்களை தமிழர்கள் இல்லாதது போல் கூறுவது ஏன் ? திரு.ராமதாஸ் அவர்கள், ஜெயலலிதா அவர்களை 'மைசூரில் பிறந்த தமிழர்' என்று குறிப்பிடிருப்பார்களேயானால், திரு.ராமதாஸ் அவர்கள்தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.

தினமலர் செய்தி : பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய தமிழர் என்ற அடையாளத்தை மறந்து, கருணாநிதி கூற்றுப்படியே, நூற்றாண்டுகள் மட்டுமே கண்ட திராவிடர்கள் என்ற சொலவடையை நாம் ஏற்றதால் தான், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, உலக பிரசித்திப் பெற்ற திருப்பதியை இழந்தோம்.
பதில் கருத்து:
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்ற கழகமா என்பதை முதலில் உறுதி செய்ய முடியுமா ? இது முதல் கேள்வி.
இரண்டாம் கேள்வி, திருப்பதியை இழந்ததால் நாம் எதை இழந்தோம் ? திருப்பதிக்கு சென்று தலைமுடியை இழக்காமல், மொட்டை போடாமல், உழைத்து சம்பாதித்த பணத்தை உண்டியலில் போட்டு, உழைக்காதோர் மடிக்கு போகாமல் போனதற்கு வேண்டுமானால் பெருமைபட்டுக் கொள்ளலாம். ஆகையால், திருப்பதியை இழந்ததால் ஒரு சிறு முடியையும் நாம் இழக்கவில்லை என்று வேண்டுமானால் பெருமையாகக் கூறிக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி : இன்று, தமிழகத்துக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ள, முல்லை - பெரியாறு பிரச்னைக்கு காரணமான, தேவிகுளம், பீர்மேடு பகுதியை இழந்தோம். கர்நாடகாவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும், காவிரி வழித்தட பகுதிகளை இழந்தோம்.
பதில் கருத்து:
எல்லாத்தையும் நாமளே எடுத்துக்கொள்ள இது என்ன உயர் ஜாதி பிராமணர் மட்டும் எடுத்துக் கொள்ளும் அர்ச்சகர் தொழில் மாதிரியா ? மற்ற ஜாதியினர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று நீதிமன்றம் செல்கிறார்களே உயர் ஜாதியினர் - அது ஏன்?
சகோதர மொழிக்காரர்களுக்கு விட்டுக் கொடுப்பதுதான் சரியான பண்பாடு. நாம் ஒன்றை விட்டுக் கொடுத்தால் அவர்கள் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளார்களா இல்லையா ?

தினமலர் செய்தி : திராவிடர் என்ற உணர்வை அதிகம் ஊட்டி விட்டதால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இழந்தோம்.
பதில் கருத்து:
திராவிடர் என்ற உணர்வை அதிகம் ஊட்டி விட்டதாலா இலங்கையில் லட்சக்கணக்கான சகோதரத் தமிழர்களை இழந்தோம்? இல்லை. தமிழகத்து தமிழர்களை ஒன்றினையவிடாமல் செய்த பத்திரிகைகள்தான் முதல் காரணம். விடுதலைப் புலிகள் மக்கள் விடுதலைக்காக போரிடும் சமயத்தில் தமிழக மக்கள் ஒன்றினையக் கூடாதவாறு அவதூறு செய்திகளை தமிழக பத்திரிகைகள் வெளியிடவில்லை என்று மனதில் கை வைத்து சொல்லுங்கள் ? மனம் இருந்தால் சொல்லுங்கள்.
விடுதலைப் புலிகள் களத்தில் போராடவும், அற்ப பத்திரிகைகளின் அவதூறுகளுக்கு எதிராகப் போராடவே அனைத்து இயக்கங்களுக்கும் சரியாக இருந்ததா இல்லையா ? விடுதலை புலிகள் இலங்கை எனும் ஒரு தேசத்திற்கு எதிராகவா போராடினார்கள்? இந்தியா உட்பட பல்வேறு தேசத்ததின் இராணுவ தளவாடங்களுக்கு எதிராக அல்லவா போராடினார்கள். தமிழகத்தில் இருந்து வெளி வந்த எத்தனை பத்திரிகைகள் உண்மையின் மேல் நின்று செய்திகளை வெளியிட்டன ?

திராவிடர் என்ற உணர்வை பெற்றுவிட்டால், பிறப்பால் அனைவரும் சமம் என்பது ஆணித்தரமாக நிலை படுத்தப்பட்டு விடும் எனும் பயமா ?
ஒரு வேளை, இராஜ கோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் மட்டும் தொர்ந்திருந்தால், தந்தை பெரியார் மட்டும் அந்த குலக் கல்வி திட்டத்தை தவிடு பொடியாக்காமல் இருந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் எனும் வர்ணாஸ்ரம அச்சானியை முறித்தது திராவிட இயக்கம் அல்லவா ?
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்கள் ஆக முடியும் எனும் நிலை இருந்ததை மாற்றி அனைவரும் மருத்துவர் ஆகலாம் எனும் நிலை அடைந்தது எந்த இயக்கத்தால் ?
நான் அறிந்த மருத்துவர்கள் யாரும் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இல்லை.

இன்று அறிவை செலுத்தி உழைத்து வாழும் நிலைக்கும், தோளில் துண்டு போடும் உரிமையும், தெருவில் சரிக்கு சமமாக நடக்கும் உரிமையும், காலில் செருப்பு போடும் உரிமையும், தெருவில் மிதிவண்டியில் பயணம் செய்யும் உரிமையும், எந்தக் குளத்திலும் குளிக்கும் உரிமையும், எந்தக் கோவிலின் உள்ளேயும் நுழையும் உரிமையும், எந்தக் கல்வியையும் கற்கும் உரிமையும், எந்தப் பதவியையும் பெறும் உரிமையையும் பெற முடிந்தது திராவிட இயக்கத்தால் அல்லவா ?

திராவிடத்தால் வளர்க்கப்பட்டோம் - வாழ்கிறோம் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்
பேஸ்புக் : http://www.facebook.com/harishkm2k

பி.கு : இவை முழுக்க முழுக்க என் அறிவுக்கு எட்டிய ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்துக்கள். இந்தச் செய்திகளில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதற்கு முழுப் பொறுப்பும் என்னையே சாரும்.