Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts

Monday, September 3, 2012

மூன்றின் முனகல் சத்தம் !

ட ஒதுக்கீட்டை சிலர் மேம்போக்காக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு சில கேள்விகள். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தயவு செய்து கீழ் கண்ட கேள்விகளுக்கு எப்பாடு பட்டாவது விடை தேடித் தருவார்களேயானால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.


கல்வி :
தமிழகத்தில் கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எத்தனை விழுக்காடு ?
அவர்களின் ஜாதி என்ன? அதாவது கல்வி பெற முடியாத சூழ்நிலையில் இருக்கும், பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். கல்வி பெற முடியாத சூழலில் உள்ளோரின் பெற்றோர் கல்வி நிலை என்ன? பெற்றோரின் ஜாதியை தனியாகக் கேட்கத் தேவை இல்லை. ஏன் என்றால் ? பெற்றோரின் ஜாதிதானே பிள்ளைக்கும் ! ஜாதிதான் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகிறதே இந்தப் பாழாய் போன சமுதாயத்தில்.

பொருளாதாரம் : 
தமிழகத்தில் ஏழை எளியோர் எத்தனை பேர் ? அவர்கள் எத்தனை விழுக்காடு ? அவர்கள் ஜாதி என்ன?அதாவது ஏழை எளியோர்ஆக விளிம்பு நிலையில் இருக்கும் பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) என்று விழுக்காட்டையும் சேர்த்துக் கூறுங்கள். ஏழை எளியோராக இருக்கும் அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலை என்ன ?


இந்தப் புள்ளி விவரங்களை, விவரம் அறிந்த மக்கள் தேடிக் கண்டு பிடித்துக் கூறுவார்களேயானால் நம் திராவிட சமுதாயம் மேன்மையுற பாக்கியம் செய்தவர்களாவர்கள். எப்படி என்றால்? இந்தப் புள்ளி விவரத்தின் படி,  பார்ப்பான் ( Brahmin ), பி.சி ( B.C ), எம்.பி.சி ( M.B.C ), எஸ்.சி ( S.C ), எஸ்.டி ( S.T ) ஆகியோரில் கல்வி பெற வழி இல்லாதவர்கள் மற்றும் அவர்களில் ஏழை எளியோருக்கு கல்வியும், அந்த கல்வியின் மூலம் வறுமையை போக்கவும் இட ஒதுக்கீடு அத்தியாவசியம்.


இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றவர்களே திரும்ப திரும்ப பலன் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது நியாயமற்ற குற்றச்சாட்டு. எப்படி என்றால், இட ஒதுக்கீட்டின் பலனை திரும்ப திரும்ப  பெறக் கூடாது என்று கூறுவதற்கு முன்னால், இந்து மதத்தை யாராவது சீர்திருத்தி ஜாதி இல்லாமல் செய்து விட்டாலும்; By constitution, by law and by practice  ஜாதி ஒழிக்கப் பட்டுவிட்டாலும், தாராளமாக இட ஒதுக்கீட்டை  நிறுத்திவிடலாம்.

By constitution-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By Law-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
By practice-வும் ஜாதி ஒழிக்கப் படாமல், 
இந்து மதத்திலும் சீர் திருத்தம் செய்யாமல் ஜாதி ஒழிக்கப்படாமல் இருக்குமேயானால், 
இட ஒதுக்கீடு வேண்டுமா கூடாதா ?

ஜாதி எந்த காலம் வரை பாதுகாக்கப் படுகிறதோ, அந்தக் காலம் வரை ஜாதிவாரி இட ஒதுக்கீடு இருந்துத்தானே ஆக வேண்டும் ?

ஜாதி படி நிலை இவ்வாறாக இருக்கிறது : 


நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீட்டையா ? ஜாதியையா ?

நீங்கள் எதிர்ப்பது இட ஒதுக்கீடு என்றால், ஜாதியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்? என்று முதலில் கூறுங்கள். அதாவது, மக்களின் சிந்தனையில், மக்கள் சொல்லும் சொல்லில், மக்களின் செயலில், மக்களுக்கான சட்டத்தில், சட்டத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனத்தில், இந்து மதத்தில் என அனைத்திலும் எப்படி ஜாதியை ஒழிக்கப் போகிறீர்கள் ? இவற்றிற்கு விடை சொல்லாமல் இட ஒதுக்கீட்டை மட்டும் குருட்டுத்தனமாக எதிர்ப்பது நியாயமற்றதா இல்லையா ?

மாறாக, இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டே, ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில் ஜாதி, மதம் குறிப்பிடுவது போன்றவை சொல்லொன்று செயல் ஒன்றாகும்.

நீங்கள் எதிர்ப்பது ஜாதியை மட்டும்தான் என்றால், ஜாதியை பாதுகாக்கும் இந்து மதத்தை எப்படி சீர்திருத்தப் போகிறீர்கள்? இந்து மதத்து வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களை எப்படி மாற்றி எழுதப் போகிறீர்கள்? உருப்படியாக செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், ஜாதிச் சான்றிதழ் வாங்கக்கூடாது. பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கையில், ஜாதி விவரம் கூறக்கூடாது; இந்து என்று எங்கேயும் பதிவு செய்யக் கூடாது.

மாறாக, ஜாதியை எதிர்த்துக் கொண்டே, இந்து மதத்தை ஏற்றுக் கொள்வது என்பது, மேலே ஏறும் escalator-ல் பின் பக்கமாக நடப்பதற்கு சமானம். Escalator மேலே ஏறுவது போல தோற்றம் அளித்தாலும். பின்னால் நடப்பதால் ஒரு ஏற்றமும் இருக்காது. 

நீங்கள் எதிர்ப்பது ஜாதி மற்றும் இட ஒதுக்கீடு என இரண்டையுமே என்றால், ஜாதியால் B.C-யான M.B.C-யான S.C-யான S.T-யான, அவர்களின் சமூக இழிவை போக்குவது எப்படி? ஜாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்குவது எப்படி? ஜாதியின் பெயரால் அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் விடிவு பெறுவது எப்படி? ஜாதியின் பெயரால் படிக்காத பாமரராக, வேலை வாய்ப்பு பெறாமல் ஏழையாகவே தொடர்பவர்களின் கதி என்ன?

மாறாக, ஜாதியையும் எதிர்த்துக் கொண்டு இட ஒதுக்கீட்டையும் எதிர்த்துக் கொண்டு, தகுதி திறமை போய்விடும் என்றால்,
வாருங்கள்,

வாருங்கள்,ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சாக்கடை அள்ளும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்க்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப் பட்ட தெருக்கூட்டும் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், சமுதாயத்தின் வீதியை இணைந்தே சுத்தம் செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலை, இனி நாம் இணைந்தே செய்வோம், விவசாய வளம் பெருக்குவோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட பினத்தை எரிக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட விவசாயத் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட சலவை செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

வாருங்கள், ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட ஆடு மாடு மேய்க்கும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட வீட்டு கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் காப்போம்.

ஜாதியின் பெயரால் என் மேல் தினிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலை நாம் இணைந்தே செய்வோம். சமுதாயத்து மக்களின் சுகாதாரத்தை நாம் பாதுகாப்போம்.

இவ்வளவையும் கேட்பதற்கே உங்கள் எண்ணம் கூசினால், இவ்வளவையும் கேட்பதற்கு நாராசமாக இருந்தால், இவ்வளவையும் கேட்பது கூட அருவருப்பைத் தருமானால், தோழர்களே மன்னித்து கொள்ளுங்க்கள்; ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் - கேட்பதற்கே கூக்சமாக இருக்கும் இவ்வளவையும் செய்து கொண்டு இன்றும் தமிழக்த்தில் மக்கள் இருக்கிறார்கள் - மனிதர்கள் என்று பெயரளவில் மட்டும்.

இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள், கல்வியிலும் உத்தியோகத்திலும் உயர்வதற்கு அவர்களுக்கு இட ஓதுக்கீடு வேண்டுமா கூடாதா? அவர்கள் கேட்பது பிச்சை அல்ல - உரிமை. மறுக்கப்பட்ட உரிமை !

இதற்கும் மேலேயும் ஜாதி வாரி இட ஒதுக்கீட்டால் தகுதி திறமை போய் விடும் என்றால், இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர்களால்தான் தகுதி திறமை குறைந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? தேடித் தேடித் பார்த்தும் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற தோழர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும், தாங்கள் இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றோம் என்று சொல்வதற்கும் கூச்சப்படுகிறவர்கள். இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள்(Scientists) இருக்கிறார்கள், மருத்துவர்கள்(Doctors) இருக்கிறார்கள், பொறியாளர்கள்(Engineers) இருக்கிறார்கள், ஆசிரியர்கள்(Teachers) இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெற்றவர்களிடம்தான் ஒழுக்கமும் நியாயமும் நேர்மையும் சமூக அக்கறையும் காண முடிகிறது.

தற்போது தமிழகத்தில் 69 % இட ஒதுக்கீடு இருக்கிறது. அப்படி என்றால் 31% இட ஒதுக்கீட்டில் வர வில்லை என்றுதானே பொருள். 31% இட ஒதுக்கீடு பெறாத மக்களே உங்கள் தகுதி திறமையை எங்கே ஒளித்து வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? என்று தயவு செய்து கூறுங்கள். இந்த 31% மக்கள் தகுதி திறமையை கண்டு பிடித்துத் தருகிறவர்களுக்கு நம் பாராட்டுக்கள். 





மிழகத்தில் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காதது உயர்ஜாதி பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்களின் மக்கள் தொகை விழுக்காடு 3%. அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் கல்வியில்லாமல் இருக்கிறார்கள். அந்த 3% பார்ப்பனர்களில் எத்தனை பேர் ஏழை எளியோர் என்ற புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது?இவற்றை எல்லாம் கண்டு பிடித்து தருகிறவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

இந்தப் புள்ளி விவரங்களைத் தராமலும், இந்தப் புள்ளி விவரங்களை பெற்று விடக் கூடாது என்றும் முனைப்பாக இருப்பவர்களும்: "தகுதி திறமை போய்விடும்" என்று புலம்புவது பார்ப்பனீய செயலா இல்லையா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Wednesday, March 7, 2012

தினமலரே - திராவிடத்தால்தான் வாழ்கிறோம் !


தினமலரில் வெளி வந்த 'திராவிட இயக்க நூற்றாண்டு விழா: தமிழர்கள் எதிர்ப்பு' என்ற செய்தியை படித்தவுடன் முதலில் கோபம் வந்தது. பின்னர் தெளிவு வந்தது.

கோபம் வந்தது - தினமலர் திரிபுவாதம் செய்வதால்.
தெளிவு வந்தது - தந்தை பெரியார் பயிற்றுவித்த பகுத்தறிவால்.
இருக்காதா பின்னே? தினமலர் மட்டும் தன் திரிபுவாதத்தை வெளிக் காட்டி இருக்காவிட்டால், திராவிடர் எனும் அருஞ்சொற்பொருள் இத்தனை கோடி தமிழ் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமா? ஆகையால், முதலில் தினமலருக்கு நன்றி.
நன்றியை பெற்றுக் கொண்டவர்கள் சில திரிபுவாதங்களுக்கான விளக்கத்தையும் தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

தினமலர் கூறுகிறது : தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் எல்லாம் திராவிட மொழிகள்; அம்மொழி பேசும் மக்கள் திராவிட மக்கள் என்றால், தென்னகத்தில், மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையை ஏற்றது ஏன்?
பதில் கருத்து:
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் தெலுங்கர்; கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் கன்னடர்; மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் மலையாளி; தமிழை தாய்மொழியாக கொண்ட திராவிட இன மக்கள் தமிழர்.
இதில் இருந்து புரிவது என்னவென்றால், சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் திராவிட இன மக்கள் அல்லர். அப்படி என்றால், சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் யார்? அது நம் பிரச்சினை அல்ல. நாம் ஒன்றும் அவர்களுக்கு பெயர் சூட்டவும் விரும்பவில்லை. அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்பவில்லை ?
ஆனால், யாரேனும் நம் மேல் ஆதிக்கம் செலுத்த விழைவார்களேயானால், அவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்ய நேர்ந்து விடுகிறது.இதற்கு, ஆராய்ச்சி செய்பவர் மேல் பாய்ந்து என்ன பயன் ? ஆதிக்கம் செலுத்துபவர் மேல் அல்லவா பாய வேண்டும் ?

தினமலர் செய்தி : தென்னகத்தில், மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையை ஏற்றது ஏன் ?
பதில் கருத்து:
ஒன்றாக இருக்க வேண்டும் என்பது நமது திராவிடர் இனம் சார்ந்த விருப்பம் என்றால், மொழிவாரியாக தனியாக இருப்பது மற்ற மொழிக்காரர்களின் விருப்பமாக இருக்கிறது. இதில் தவறு என்ன ? தமிழர்கள் அனைவரும் சென்று, தெலுங்கரை, கன்னடரை, மலையாளியை கட்டாயம் திராவிடத்தை ஏற்க வேண்டும் என்று எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும். திராவிடம் என்பதே ஆதிக்கத்திற்கு எதிரானது. இது, திராவிடத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக இருக்கிறதா இல்லையா ?

தினமலர் செய்தி : அப்படி பிரித்தது, மற்ற மொழி பேசும் மக்களின் விருப்பம் என்றால், தெலுங்கு நாடு, கன்னட நாடு, மலையாள நாடு என, மற்ற மாநிலங்கள் பெயர் சூடிக் கொள்ளாத நிலையில், மிச்சமிருந்த சென்னை மாகாணத்துக்கு திராவிட நாடு எனப் பெயர் சூட்டாமல், தமிழ்நாடு என, தி.மு.., பெயர் சூட்டியது ஏன்?
பதில் கருத்து:
இது என்ன கேள்வி என்றே புரியவில்லை. அவரவர், அவரவர் மொழிக்கான நாட்டை ஏற்றுக் கொண்ட பிறகு; அவர்கள் மாநிலத்துக்கு அவர்கள் தாய் மொழியில் விருப்பம் போல் பெயர் வைத்தால் நமக்கென்ன? தெலுங்கர்களை போய், நீங்கள் தெலுங்கு நாடு என்றுதான் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லவா ? கன்னடரை போய், நீங்கள் கன்னட நாடு என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லவா ? மலையாளிகளிடம் போய், நீங்கள் மலையாள நாடு என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை அல்லாமல் வேறென்ன ? அப்படி ஆதிக்கம் செய்தால், அது திராவிடம் எனும் கொள்கைக்கு எதிரானது. ஏனென்றால் திராவிடம் என்பது ஆதிக்கத்திற்கு எதிரானது.
திராவிட மொழிகள் தங்களுக்கு என்று மொழிவாரியாக நிலப் பிரிவிணை செய்து கொண்ட பிறகு, தமிழ் மொழியை தாய் மொழியாகப் பேசும் மக்கள் கொண்ட நிலத்துக்கு தமிழ்நாடு என்று வைத்தது சாலப் பொருந்துகிறது. தமிழர்கள் என்றுமே, மூன்று விழுக்காடு பேருக்கு மட்டும் தலைவராக இருந்து கொண்டு 'லோக குரு' ( உலகத்துக்கு குரு ) என்று கூறிப் பிதற்றுவோர் இல்லையே ?!?

தினமலர் செய்தி : அப்படி என்றால், தமிழக மக்கள், திராவிடர்கள் என்ற தங்கள் கொள்கையை, தி.மு..,வே ஏற்கவில்லை என்று தானே பொருள்.
பதில் கருத்து:
தமிழ் மக்கள், தெலுங்கு மக்கள், கன்னட மக்கள், மலையாள மக்கள் ஆகியோர் இனத்தால் திராவிடர் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டு, தமிழ்மொழி பேசும் தமிழக மக்கள் திராவிடர் இன மக்கள் இல்லை என்றால் என்ன குதர்க்கம் இது ?
தமிழ் மக்கள் + தெலுங்கு மக்கள் + கன்னட மக்கள் + மலையாள மக்கள் = திராவிடர் இனம்
அப்படி என்றால் ? தமிழ் மக்கள் திராவிடர் இனத்தில் அடங்குகிறார்களா இல்லையா ?
இதன் நீட்சிக் கேள்வி இதுதான்: சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டிருக்கும் பிராமணர், தங்களின் தாய்மொழியான சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு, திராவிட மொழிகளின் தாய் மொழியான தமிழ் மொழியை தங்கள் பேச்சு மொழியாக ஏற்றுக் கொண்டதன் காரணம் என்ன ?
அப்படி என்றால்,சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்தான் சிறந்த மொழி என்று ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? பிற மொழி சிறப்பாக இருந்தால் அது நல்லதுதான். ஆனால், எந்த மொழியும் மற்ற மொழியின் மேல் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதுதான் திராவிடத்தின் கொள்கை சாரம். இந்தக் கொள்கை என்ன மின்சாரம் போல் தாக்குகிறதோ ? 26 சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் மொழியில் திணிக்க முயன்றது ஆதிக்கம் அல்லாமல் வேறேன்ன ? இன்றும் கூட கிராமங்களில் வயதானவர்கள் வாயில் வடமொழி எழுத்துக்களான '','', '', '', 'ஶ்ரீ' போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் உச்சரிக்க கடிணமாக இருக்கும்போது; மேலும் 26 சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் மொழியில் திணிக்க முயன்றது எதனால் ? இது ஆதிக்கம் என்றால், அதனைத் தடுக்கப் பயன்பட்ட கொள்கைதான் திராவிடம்.

தினமலர் செய்தி : தமிழகத்தைப் போல், ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற பெயரால், இயக்கங்கள் தலையெடுக்காத நிலையில், யாரும் தங்களை திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளாத நிலையில், தி..,வின் வழி வந்த கட்சிகள் மட்டும் இன்னும், திராவிடர் எனும் அடைமொழியை தூக்கி சுமப்பது ஏன்?
பதில் கருத்து:
தமிழகத்தில், தமிழ் மக்களின் உழைப்பில் கல்லா கட்டும் பத்திரிகைகளுக்கு அடுத்த மாநில மக்கள் மீது எவ்வளவு கரிசனம். திராவிடர் என்பது இனப் பெயர்.
திராவிடமொழிக் குடும்பத்தை சேர்ந்த பிற மொழிகள், இனப் பெயரான 'திராவிடர்' என்பதை பயன்படுத்தவில்லை என்றால், அதை அந்தந்த மொழிக் காரர்களிடம்தான் கேட்க வேண்டும்.
தெலுங்கு சகோதரர்களே, கன்னட சகோதரர்களே, மலையாள சகோதரர்களே: 'நீங்கள் ஏன் திராவிடர் என்ற பெயரை பயன்படுத்தவில்லை' என்று தமிழ்நாட்டில் வெளியாகும் தினமலர் எங்களிடம் கேட்கிறது. தினமலரும் நீங்களும் உங்களுக்கு வசதிப்படும் வேளையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி : திராவிடர் என்ற சொல்லை இன்னும் ஒரு சிலர் தாங்கிப் பிடிக்க காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அதற்கு, பா..., நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கூறிய உதாரணம் பெருமளவு பொருந்துகிறது. "தமிழகத்தில் ஒரு சில பச்சைத் தமிழர்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழர். வைகோ, விஜயகாந்த் இருவரும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்., கண்டியில் பிறந்த மலையாள மொழி பேசுபவர்' என்ற அவரது கூற்றை ஏற்க வேண்டியுள்ளது.
பதில் கருத்து:
உதாரணம் பெருமளவு பொருந்துவதற்கும், அப்படியே பொருந்துவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. கேள்வியிலேயே சில குளறுபடிகள் இருக்கிறது.
இது என்ன கதையாக இருக்கிறது : 'முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழராமே'. அப்போ, கலைஞர் அவர்கள் பிறந்தது எங்கே ? விஜயகாந்த் அவர்கள் பிறந்தது எங்கே ? வைகோ அவர்கள் பிறந்தது எங்கே ? சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதத்தை குறிக்கும், 'வேதா நிலையத்தில்' வசிக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மைசூரில் பிறந்தாலும், தமிழர் என்றே அடையாளப் படுத்தப்படுகிறார். தமிழகத்தில் பிறந்த கலைஞர், விஜயகாந்த், வைகோ போன்றவர்களை தமிழர்கள் இல்லாதது போல் கூறுவது ஏன் ? திரு.ராமதாஸ் அவர்கள், ஜெயலலிதா அவர்களை 'மைசூரில் பிறந்த தமிழர்' என்று குறிப்பிடிருப்பார்களேயானால், திரு.ராமதாஸ் அவர்கள்தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.

தினமலர் செய்தி : பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய தமிழர் என்ற அடையாளத்தை மறந்து, கருணாநிதி கூற்றுப்படியே, நூற்றாண்டுகள் மட்டுமே கண்ட திராவிடர்கள் என்ற சொலவடையை நாம் ஏற்றதால் தான், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, உலக பிரசித்திப் பெற்ற திருப்பதியை இழந்தோம்.
பதில் கருத்து:
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்ற கழகமா என்பதை முதலில் உறுதி செய்ய முடியுமா ? இது முதல் கேள்வி.
இரண்டாம் கேள்வி, திருப்பதியை இழந்ததால் நாம் எதை இழந்தோம் ? திருப்பதிக்கு சென்று தலைமுடியை இழக்காமல், மொட்டை போடாமல், உழைத்து சம்பாதித்த பணத்தை உண்டியலில் போட்டு, உழைக்காதோர் மடிக்கு போகாமல் போனதற்கு வேண்டுமானால் பெருமைபட்டுக் கொள்ளலாம். ஆகையால், திருப்பதியை இழந்ததால் ஒரு சிறு முடியையும் நாம் இழக்கவில்லை என்று வேண்டுமானால் பெருமையாகக் கூறிக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி : இன்று, தமிழகத்துக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ள, முல்லை - பெரியாறு பிரச்னைக்கு காரணமான, தேவிகுளம், பீர்மேடு பகுதியை இழந்தோம். கர்நாடகாவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும், காவிரி வழித்தட பகுதிகளை இழந்தோம்.
பதில் கருத்து:
எல்லாத்தையும் நாமளே எடுத்துக்கொள்ள இது என்ன உயர் ஜாதி பிராமணர் மட்டும் எடுத்துக் கொள்ளும் அர்ச்சகர் தொழில் மாதிரியா ? மற்ற ஜாதியினர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று நீதிமன்றம் செல்கிறார்களே உயர் ஜாதியினர் - அது ஏன்?
சகோதர மொழிக்காரர்களுக்கு விட்டுக் கொடுப்பதுதான் சரியான பண்பாடு. நாம் ஒன்றை விட்டுக் கொடுத்தால் அவர்கள் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளார்களா இல்லையா ?

தினமலர் செய்தி : திராவிடர் என்ற உணர்வை அதிகம் ஊட்டி விட்டதால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இழந்தோம்.
பதில் கருத்து:
திராவிடர் என்ற உணர்வை அதிகம் ஊட்டி விட்டதாலா இலங்கையில் லட்சக்கணக்கான சகோதரத் தமிழர்களை இழந்தோம்? இல்லை. தமிழகத்து தமிழர்களை ஒன்றினையவிடாமல் செய்த பத்திரிகைகள்தான் முதல் காரணம். விடுதலைப் புலிகள் மக்கள் விடுதலைக்காக போரிடும் சமயத்தில் தமிழக மக்கள் ஒன்றினையக் கூடாதவாறு அவதூறு செய்திகளை தமிழக பத்திரிகைகள் வெளியிடவில்லை என்று மனதில் கை வைத்து சொல்லுங்கள் ? மனம் இருந்தால் சொல்லுங்கள்.
விடுதலைப் புலிகள் களத்தில் போராடவும், அற்ப பத்திரிகைகளின் அவதூறுகளுக்கு எதிராகப் போராடவே அனைத்து இயக்கங்களுக்கும் சரியாக இருந்ததா இல்லையா ? விடுதலை புலிகள் இலங்கை எனும் ஒரு தேசத்திற்கு எதிராகவா போராடினார்கள்? இந்தியா உட்பட பல்வேறு தேசத்ததின் இராணுவ தளவாடங்களுக்கு எதிராக அல்லவா போராடினார்கள். தமிழகத்தில் இருந்து வெளி வந்த எத்தனை பத்திரிகைகள் உண்மையின் மேல் நின்று செய்திகளை வெளியிட்டன ?

திராவிடர் என்ற உணர்வை பெற்றுவிட்டால், பிறப்பால் அனைவரும் சமம் என்பது ஆணித்தரமாக நிலை படுத்தப்பட்டு விடும் எனும் பயமா ?
ஒரு வேளை, இராஜ கோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் மட்டும் தொர்ந்திருந்தால், தந்தை பெரியார் மட்டும் அந்த குலக் கல்வி திட்டத்தை தவிடு பொடியாக்காமல் இருந்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் எனும் வர்ணாஸ்ரம அச்சானியை முறித்தது திராவிட இயக்கம் அல்லவா ?
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்கள் ஆக முடியும் எனும் நிலை இருந்ததை மாற்றி அனைவரும் மருத்துவர் ஆகலாம் எனும் நிலை அடைந்தது எந்த இயக்கத்தால் ?
நான் அறிந்த மருத்துவர்கள் யாரும் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இல்லை.

இன்று அறிவை செலுத்தி உழைத்து வாழும் நிலைக்கும், தோளில் துண்டு போடும் உரிமையும், தெருவில் சரிக்கு சமமாக நடக்கும் உரிமையும், காலில் செருப்பு போடும் உரிமையும், தெருவில் மிதிவண்டியில் பயணம் செய்யும் உரிமையும், எந்தக் குளத்திலும் குளிக்கும் உரிமையும், எந்தக் கோவிலின் உள்ளேயும் நுழையும் உரிமையும், எந்தக் கல்வியையும் கற்கும் உரிமையும், எந்தப் பதவியையும் பெறும் உரிமையையும் பெற முடிந்தது திராவிட இயக்கத்தால் அல்லவா ?

திராவிடத்தால் வளர்க்கப்பட்டோம் - வாழ்கிறோம் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்
பேஸ்புக் : http://www.facebook.com/harishkm2k

பி.கு : இவை முழுக்க முழுக்க என் அறிவுக்கு எட்டிய ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்துக்கள். இந்தச் செய்திகளில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதற்கு முழுப் பொறுப்பும் என்னையே சாரும்.



Sunday, February 12, 2012

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் !


கடவுள் இல்லை - கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்
கடவுளை படைத்தவன் முட்டாள்
கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி!
- தந்தை பெரியார்


ஜாதி இருக்கிறது; ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

யார் தன்னை பிராமணன் என்கிறானோ? அவன் மகா மகா அயோக்கியன்

யார் தன்னை ஜாதியினால் அடையாளப் படுத்திக் கொள்கிறானோ? அவன் முட்டாள்

யார் தன் ஜாதி அடுத்த ஜாதியை காட்டிலும் உயர்ந்தது என்கிறானோ? அவன் அடிமுட்டாள்

யார் அடுத்தவரை தாழ்ந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி, மிகவும் பிற்பட்ட ஜாதி என்கிறானோ? அவன் காட்டுமிராண்டி

தாழ்ந்த மக்கள் என ஒருவரும் இல்லை; தாழ்த்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் தாழ்த்தப்பட்டார்கள் ? மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களால் , பிற்படுத்தப்பட்டவர்களால், உயர் ஜாதியினரால் ஆகிய மூவராலும் தாழ்த்தப்பட்டார்கள்.

மிகவும் பிற்பட்ட மக்கள் என ஒருவரும் இல்லை; மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் மிகவும் பிற்படுத்தப்பட்டார்கள் ? பிற்படுத்தப்பட்டவர்களால்,  உயர் ஜாதியினரால் ஆகிய இருவராலும் மிகவும் பிற்படுத்தப்பட்டார்கள்.

பிற்பட்ட மக்கள் என ஒருவரும் இல்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் இருக்கிறார்கள். யாரால் பிற்படுத்தப்பட்டார்கள் ? உயர் ஜாதியினரால் பிற்படுத்தப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட ஒருவரின்  குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார் ? மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவரின் குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார் ? பிற்படுத்தப்பட்டவர் ஒருவரின் குழந்தை எப்படி அடையாளம் காணப்படுகிறார்?

தாழ்த்தப்பட்டவரின் குழந்தையை, தாழ்த்தப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம். மிகவும் பிற்படுத்தப்பட்டவரின் குழந்தையை, மிகவும் பிற்படுத்தப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம். பிற்படுத்தப்பட்டவரின் குழந்தையை, பிற்படுத்தப்ப்பட்டவராகத்தான் அடையாளப் படுத்துகிறது சமூகம்.

ஆக, பிறப்பால் ஜாதி சங்கிலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி கணிதத்தில் Pi Value எப்போதும் Constant-ஆக 3.14 என்று இருக்கிறதோ, அதுபோல நம் மேலும் நம் குழந்தைகளின் மேலும் ஜாதி தொடர்ச்சியாக Constant-ஆக இருக்கிறது.




என்னதான் நம் 'அறிவு' வட்டம் பெரிதானாலும், என்னதான் நம் 'தெளிவு' வட்டம் பெரிதானாலும், என்னதான் 'தகுதி' வட்டம் பெரிதானாலும், என்னதான் நம் 'திறமை' வட்டம் பெரிதானாலும், இவைகளுக்கு ஏற்ப 'பொருளாதார' வட்டம் பெரிதானாலும், 'ஜாதி' எனும் Constant நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே; அதைப் பற்றிக் கவலை இல்லையா ? இல்லையானால் - அறிவு வளர்ச்சி, தெளிவு வளர்ச்சி, தகுதி வளர்ச்சி, திறமை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி வந்தவுடன் கீழ் ஜாதி எனும் இழிவு பெரிதாகத் தெரியவில்லையா ?

என்றாவது, எங்காவது தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் குறைந்தபட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, பிற்படுத்தபட்டவர்களாகவோ உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?


என்றாவது, எங்காவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் குறைந்தபட்சம், பிற்படுத்தபட்டவர்களாக உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?


என்றாவது, எங்காவது பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள் ,  உயர் ஜாதியாக உயர்த்தப் பட்டிருக்கிறார்களா?

இப்படி, ஜாதியானது மாறாமல் இருக்கிறது பாருங்கள், இதுதான் இந்துமதம் விளக்கும் சனாதன தர்மம். அதாவது மாறாதது. 'மாற்றம் ஒன்றுதான் மாறாதது' எனும் மானுட கோட்பாட்டுக்கு எதிர்மறையானது இந்த சனாதன தர்மம்.

ஆகையால்தான், சமூக சமத்துவம் பெற இட ஒதுக்கீடு எனும் முறை கொண்டு வரப்பட்டது.

ஜாதி ஒழிக்கப்படும் வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். இதில், விரைவாக சமூகநீதி பெற வேண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தோழர்கள்தான். அடுத்ததாக, சமூகநீதி பெற வேண்டியவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட தோழர்கள்தான். அதற்கும் அடுத்ததாக, பிற்படுத்தபட்ட தோழர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் தனக்கே உரித்தான கூரிய சமூக சிந்தனையோடு கூறுவார்கள் :  "கிணத்துல ரொம்ப கீழ இருக்கிறவனுக்கு பெரிய நீள கயிறு கொடுத்து மேல கூட்டிட்டு வா. அதுக்கும் மேல கிணத்துல் இருக்கிறவனுக்கு, அவனை வெளியில எடுத்துட்டு வர அளவுக்கு கயிறு கொடு. அப்புறம் சம தளத்துக்கு எல்லோரும் வந்தப்புறம் தகுதி திறமை எல்லாம் பாக்கலாம். சம தளத்துக்கு வரவரை கயிறு கொடுத்துகிட்டுதான் இருக்கனும்" என்றார்கள்.

நீங்களே சொல்லுங்கள், ஜாதி நம் தோளில் திணிக்கப்பட்டு இருக்கும் வரை, அடுத்தவர் தோளில் உயர் ஜாதி எனும் அடையாளம் தொங்கி கொண்டிருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்துதானே ஆக வேண்டும்.

நம் தோளில் திணிக்கப்பட்ட ஜாதியில் இருந்து விடுதலை கிடைக்கும் போது, அடுத்தவர் தோளில் உயர் ஜாதி எனும் அடையாளம் நீங்கும் போது இட ஒதுக்கீட்டை ஒழிக்க யாருக்கு என்ன குறைச்சல் ?

தந்தை பெரியார் தந்த உழைப்பும் அறிவும்தான், திராவிடருக்கு மானத்தையும் அறிவையும் பெற வைத்தது.

சிந்தித்துப் பாருங்கள் - கொள்வன கொண்டு விடுவன விடுங்கள்.


உண்மையுடன்
திராவிடன் கமுககுடி மாரிமுத்து