Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, March 12, 2013

தஞ்சைக்குள் நஞ்சா ?

ஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.

 

வானமோ பொய்த்தது; கர்நாடகமோ கடைக்கண் மூடியது; வந்ததோ வறட்சி. தொடர்வதோ தற்கொலைகள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் தற்கொலைகளின் ஆரம்பக்கட்ட அறிகுறி காவிரிப் படுகையில் தென்படுகிறது. இதில், பொன்னியின் செல்விக்கு (!) ( செல்வி.ஜெயலலிதா-வாம் ) மட்டும் குறைச்சல் இல்லை. ஏற்கனவே ஈழத்தை வீட்டு பீரோவில் வெச்சு இருக்காங்க. இன்னிக்கோ நாளைக்கோ பீரோவை திறந்து, எடுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.


இப்படி ஏற்கனவே தொல்லையில் துவளும் தஞ்சையில் மற்றொரு பாதகமாக பேரிடியொன்று வந்து இறங்குகிறது.

ஆம் ! அக்டோபஸ் வருகிறது ... ஜாதீ என்னும் ஆக்டோபஸ் வருகிறது.

தோ ஜாதீ புதிதாக தஞ்சைக்குள் நுழைய வரவில்லை. ஏற்கனவே இருக்கிற ஜாதீகளை ஒன்றிணைக்க வருகிறது. தஞ்சைக்குள் பெருவாரியாக இருக்கும் ஜாதீ கட்சிகள் முக்குலத்தோர் கட்சிகளே. அதாவது, கள்ளர், தேவர், மறவர் போன்றவை. இவர்கள் தஞ்சை கிராமங்களில் செய்த அட்டுழியங்கள் எண்ணிலடங்கா. 

தெருவுக்குள் ஆதி திராவிடர்கள் செருப்பு போடக் கூடாது என்றவர்கள். தோளில் துண்டுப் போடக் கூடாது என்றவர்கள். சைக்கிளை தெருவில் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியவர்கள்; ஆதி திராவிடர் தெரு வழியாக வரும் குழாயில், தண்ணீர் பிடிப்பது இழுக்கு என்று கருதுபவர்கள். ஆதி திராவிடர்களை கொச்சைப் படுத்திப் இழிவாய் பேசுவது; கட்டி வைத்து அடிப்பது போன்றவற்றை செய்த யோக்கியவான்கள் தான் இந்த முக்குலத்தோர். மறுக்க முடியுமா ?


இப்படி ஆதிக்கம் செய்தவர்கள் இன்றைய தேதியில், ராஜ ராஜ சோழனை தங்கள் முன்னோர் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் 'மனு சாஸ்திர' அடிப்படையில் நீதி பரி பாலனம் செய்யப்பட்டது. அந்த மனு சாஸ்திர அடிப்படையில் ஆதி திராவிடர்கள் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரி என்று ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். இன்றைக்கும் இந்த பிரிவினையை அனைத்து கிராமங்களிலும் காணலாம்.

மிழ்நாட்டில் ஆதி திராவிடர் நிலை இவ்வாறாகத்தான் இருக்கிறது :

Percentage to Total Workers ( தமிழகம் முழுதும் )   
 i. Cultivators (  விவசாயிகள் ) - 10.2 %
 ii. Agricultural Labourers ( விவசாயத் தொழிலாளர்கள் ) - 58.5 %
 iii. Household Industry Workers ( வீட்டு வேலைத் தொழிலாளர்கள் ) 2.3 %
 iv. Other Workers ( இதர வேலையாட்கள் ) - 29.0%

தஞ்சை மாவட்டத்தில் புள்ளி விவரம் இவ்வாறாகக் கூறுகிறது.
தஞ்சை மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஆதி திராவிடர் - 18%
தஞ்சையில் மொத்தமாக கல்வி பெற்றோர் - 75.5% 
கல்வி அறிவு பெற்ற  ஆதி திராவிடர்கள் - 64.1%

ஆதாரம் : http://www.tn.gov.in/deptst/ADIDRAVIDARANDTRIALWELFARE.pdf

இந்த புள்ளி விவரம் என்ன புரிய வைக்கிறது என்றால்; இன்னும் கல்விக் கண் தஞ்சையில் முழுமையாக இல்லை.

பாதிக்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் விவசாயத் தொழிலாளர்கள். 29 விழுக்காட்டினர் இதர வேலையாட்களாக இருக்கிறார்கள். அது என்ன இதர  வேலையாட்கள்? தெருக் கூட்டுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், மலம் அள்ளுபவர்கள். அவர்கள் என்ன விரும்பியா செய்கிறார்கள்? இல்லை. இந்த பாழாய்ப்போன பார்ப்பனீய இந்து சமூகம் திணித்தது. ஏன் என்று கேட்டால்? 'முற்பிறவி வினை' என்று காதில் பூ சுத்துகிறார்கள் . 'தலை விதி' என்று வாய் கிழியப் பேசுகிறார்கள்.

நம் கேள்வி இதுதான்:
இந்த 'முற்பிறவி வினை', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விழ மாட்டேங்கிறது? இந்த 'தலை விதி', ஏன் பார்ப்பான் மேலும் முக்குலத்தோர் மேலும் விடிய மாட்டேன்கிறது ?


இன்றைக்கு இதே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த படித்த இளைஞர்கள் என்னதான் வெளி நாடுகளில் வசித்தாலும்,  தாங்கள் ஏதோ உயர்ந்த ஜாதி எனும் எண்ணம் கொண்டவராகவோ; தங்கள் ஜாதி, பெருமை வாய்ந்தது எனும் என்ணம் கொண்டவராகவோ; தங்கள் சுய ஜாதி அபிமானம் கொண்டவராகவோ எண்ணிக் கொண்டோ - தங்களின் பெயரின் பின்னால் 
சோழகர் என்றோ , மண்கொண்டார்  என்றோ, தஞ்ச்சிராயர் என்றோ, சேனை நாட்டார் என்றோ இன்னும் இத்யாதி இத்யாதி ஜாதி வாலைப் போட்டுக் கொள்வதில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள். 

தெரியாமல் போடுகிறவர்கள் திருந்திக் கொள்வார்கள். தெரிந்தே போடுவோர், 'அடடா! மனித குல சமத்துவத்திற்கு எதிராக இப்படி தவறாக  நடந்து கொண்டோமே' என்று வருந்திக் கொள்வார்கள்.

படித்துப் பட்டம் பெற்று வேலையில் அமர்ந்து  சாதிப்பார்கள்  என்றுப் பார்த்தால், ஜாதீ அல்லவா பார்த்துக் கொண்டு  இருக்கிறார்கள்?

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த ஜாதீக்களை ஒருங்கிணைக்க தஞ்சைக்குள் ஓர் ஆக்டோபஸ் வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆக்டோபசின் பெயர் "ராம தாஸ்". எப்படி, கதைப்படி ராமன் நம்மை எல்லாம் "சூத்திரன்" என்றும் "பஞ்சமன்" என்றும் நிலை நிறுத்த எண்ணினானோ அதே போல இந்த ராம தாஸ் செய்ய முனைகிறார்.ராமனின் தாசன் அல்லவா ?

முக்குலத்தோர்(கள்ளர் , தேவர், மறவர் ) யோக்கியமானவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருப்பதாகத் தாங்களே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

இவர்கள் வாங்கும் நிலத்துக்கு பூமி பூஜை செய்ய பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்; இவர்கள் கிரஹப் பிரவேசம் எனும் பெயரில் பார்ப்பானை அழைத்து சுயமரியாதை இழப்பதும்;இவர்கள் வீட்டுத் திருமணத்தை பார்ப்பன புரோகிதர் நடத்தி வைப்பதும்; பெற்றோருக்கு திதி   கொடுக்கும் போது பார்ப்பன புரோகிதனை அழைத்து தங்கள் சுயமரியாதையை இழப்பதும் இதே முக்குலத்தோர்தான்.இந்தச் சுயமரியாதை சிங்கங்கள் கோவிலில் இன்றளவும் கருவறைக்குள் நுழைய முடியாது. அவர்களின் பிரத்யேக  ஜாதீ கோவிலில் வேண்டுமானால் போகலாம். மறுக்க முடியுமா?

 
"னைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆக முடியாதுடா அம்பி. அது பிரம்மாவின் முகத்தில் பிறந்தவாள் மட்டும்தான் செய்யணும். புரியுதோ இல்லியோ நோக்கு. அபிஷ்டு அபிஷ்டு !! பிராமனாள் எல்லாம் கடவுளுக்கும் மேலானவாடா. வேதத்தை படிக்கலியோ என்னோ ?! ஓ ! வேதத்தை நீர் படித்தா காதில ஈயத்த ஊத்த சொல்லின்னா எழுதி வெச்சிருக்கோம். சித்தே மறந்துட்டேண்டா அம்பி !! 

நன்னா ஞாபகம் வெச்சுக்கோ - எங்க்களவாவ வெச்சுதான் நீங்கோ பூமி பூஜை பண்ணனும், வீடு குடி போகனும், திருமணம் செய்யணும், சாந்தி முஹுர்த்தம் செய்யணும், திதி செய்யணும்; ஆனா, நன்னா ஞாபகம் வெச்சுக்கோ இந்த கருவறைகுள்ள மட்டும் வரப்டாது. ஏன்  ப்டாது எதுக்கு ப்டாதுன்னு கேக்கப் புடாது!

கலைஞர், உங்களவா சுயமரியாதை அடையனும்ன்னு,  'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்' ரெண்டு தடவ சட்டமா கொண்டு வந்தார். விட்டுவோமா ? இல்ல அவ்வளவு சீக்கிரத்தில் அத விட்டுடுவோமான்னுதான் கேட்கிறேன். 

உங்களவா முதுகில பாரு. எங்களவா முதுகில பாரு. வித்தியாசம் தெரியுதா ? ம்ம்ம்.. ஆமாம்! நாங்கள் பூனூல் போட்டிண்டு இருக்கோம். ஏன் தெரியுமா? நாங்கள் துவிஜாதிகள் ( இரு பிறப்பாளர்கள்  ). சுத்திராளுக்கு  பூணூல் போட உரிமை இல்லைடா அம்பி! மனு சாஸ்திரம் சொல்லுது.

ஆனாலும் நீங்களும் நாங்களும் இந்து. மறந்து விடாதீர்கள்; மறந்தும் இருந்து விடாதீர்கள்; நாமெல்லாம் இந்து; எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.

லோகத்தில் பொறாமை அதிகரிச்சுட்டே இருக்கு. வேனும்னா பாரு, இப்படி சுயமரியாதை-கியமரியாதை உரிமை-கிரிமை ஏதானும் கேட்டா,  எங்கள் காலில் விழுகிற உங்களவாவே உங்கள எதிர்க்கிறாளா இல்லையா பாரு. பத்திரிகை ( தினமலர், தினமணி, துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி ) எல்லாம் எங்களவா கைய்லன்னா இருக்கு.

இவாளுக்கு வியாக்யானம் சொல்லியே பிராணனை போகுதே !!"

நி
ற்
ப்படி இந்த முக்குலத்தோர் தங்கள் சுயமரியாதையை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அவர்களும் ஆதி திராவிடர்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைக்கக் கூடாது.

தந்தை பெரியார் ஒழுக்கம் என்பதாகக் கூறியது எவ்வளவு ஆழமானது:

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.

இந்து மதத்தின் படியே இந்த முக்குலத்தோர் என்போர் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? சூத்திரன் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இந்து மதத்தின் படியே ஆதி திராவிடர்கள் எவ்வாறு குறிக்கப் படுகிறார்கள் ? பஞ்சமர் என்றல்லவா குறிக்கப் படுகிறார்கள் ?

இருவர் மேலும் இந்து மதத்தின் வர்னாஸ்ரம இழிவுதானே தொக்கி நிற்கிறது ?

சூத்திரன், பஞ்சமர் என்ற சொல் வெருக்கத்தக்கதாக இருந்தாலும், 
பஞ்சமர் என்ற சொல்லைக் காட்டிலும் சூத்திரன் என்ற சொல் அல்லவா மகா மட்டமான கேவலமான இழிவான சொல். மறுக்க முடியுமா?

பார்ப்பனர் அல்லாத அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறது. திராவிடர், ஆதி திராவிடர் இருவருக்குமே இட ஒதுக்கீடு இருக்கிறது. இருவருமே பார்பனீயத்தால் பாதிக்கப்பட்ட சமுகம். இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி திராவிடருக்கும் இருக்கிறது, ஆதி திராவிடருக்கும் இருக்கிறது. 

ஆனாலும் , வழக்கம் போலவே ஆதி திராவிடர் கல்விப் பெற்றாலும், பொருளாதார மேம்பாடு அடைந்தாலும் பிற்படுத்தப் பட்டோர்க்கு பொறாமைத் தீ பொங்கி வழிகிறது. எப்படி என்றால்? பார்ப்பனர்களுக்குப் பொத்துக் கொண்டு வருமே அதைவிட கொஞ்சம் குறைவாக பொத்துக் கொண்டு வருகிறது.

ஏற்கனவே இருக்கிற இழிவு பத்தாது என்று, இழிவு++ ஆக  ராமதாஸ் அக்டோபசை விட்டால் என்ன ஆகும்?

வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு விட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்பானேன்?


முறையாக காவிரியில் தண்ணீர் கிடைத்து நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய தஞ்சையில் ஜாதீ எனும் நஞ்சையா விதைப்பது?

உண்மையுடன் 
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Friday, March 1, 2013

அன்னை-யார்?

காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம்.

 

க்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும்  அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் 'அம்மா'வாக இருக்கலாம்.


  

ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம்.


ண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்?

சில காலங்களுக்கு முன்னர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றி கூறிய ஒரு செய்தி மிக சுவாரசியமாகவும் - ஆகா ! இவ்வளவு சுய மறுப்பாளரா தந்தை பெரியார் எனும் பிரமிப்பே மேலோங்கச் செய்தது.  

தந்தை பெரியார் அவர்கள், இந்து மதத்தில் உயர் ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தார்; ஆனாலும், காலம் முழுதும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியின் முன்னேற்றதுக்கு உழைத்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், செல்வமும் சொத்தும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார்.  ஆனாலும், காலம் முழுதும் ஏழைகளுக்காகவே பாடுபட்டார். தன்  சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கே செலவு செய்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களை, கன்னடர் என்றும் தெலுங்கர் என்றும் கொச்சைப் படுத்தினார்கள். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அந்தக் கொச்சைப்  படுத்தலைப் புறந்தள்ளி, தமிழர்-தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.

என்ன! தந்தை பெரியார் அழகு தமிழில் அடுக்கு மொழியில் பேசத் தெரியாதவர்; கொச்சைத் தமிழில் நடைமுறையில் நடப்பவற்றை உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கூறுவார்கள். ஆனாலும், அந்த கொச்சைத் தமிழ்தான் தமிழரைத் தன்மானம் பெற வைத்தது.

தந்தை பெரியார் ஆணாகப் பிறந்தார்; ஆனாலும் காலம் முழுதும் பெண்ணின் உரிமைக்காக ஓடி ஓடி உழைத்து கொட்டித் தீர்த்தார்கள்.

பாரதியார் கூட பெண் உரிமைக்காக வெறுமே பாடினார். தந்தை பெரியார் அவர்களோ பெண் விடுதலைக்காக, பெண் உரிமைக்காக கிராமம் கிராமமாக காலில்  சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருந்து ஈ.வெ.ராமசாமி ஆன நம் தலைவருக்குத்தான், பெண்கள் மாநாடு  கூட்டி  "பெரியார்" என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள், உயர் ஜாதி என்று சொல்லப் படுவதான, பணக்காரன் என்கிற, பிற மொழிக்காரர் என்கிற, ஆண் என்கிற அனைத்து தளத்திலுமே ஒரு சுய மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் !


ன்னே ஓர் ஆச்சரியம் ! இப்படிப் பட்ட ஒரு சுய மறுப்பளரை இந்த உலகம் கண்டதுண்டா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இன்னும் கூற வேண்டுமானால், காங்கிரசில் சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று தான் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும்  தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்கள். அடடா! இதுவன்றோ பதவி மறுப்பு ! இன்றைக்கோ, பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் என்றாலும், பல்லிளித்துக் கொண்டு தாஜா செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் ! 

மதராஸ் ராஜதானியை ஆட்சி செய்யும் பெரும் பதவி இரண்டு முறை பெரியாரை நோக்கி வந்தது. வந்த பதவி பூமராங் போல திரும்பிச் சென்றது. இரண்டு முறையும் அந்தப் பதவியை துச்சமென மதித்து ஏற்க மறுத்தார்கள். 

சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இவற்றையெல்லாம் கேட்டு மலைப்பாய் இருக்கிறதா ?!

பொறுங்கள் ! இன்னும் இருக்கிறது !

இவ்வளவு சுய மறுப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் ஒரு சுய மறுப்பு இருக்கிறது ! அந்த சுய மறுப்புதான் உலக இயற்கையின் கடும் சவால். அந்த சுயமறுப்பை வாழ்ந்த தியாகச்  செம்மல்கள் யார் தெரியுமா ?!

இது ஏதடா, இதுவரையில் தந்தை பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இப்போது "செம்மல்கள்" என்று பன்மையில் கூறுகிறானே என்று எண்ணுகிறீர்களா ?!

அந்த தியாகச் செம்மல்கள் யாவர் தெரியுமா? அவர்கள்தான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் !

நம்மவர்களில் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை; வழக்கம் போல பார்ப்பனப் பத்திரிகைகள் வரலாற்றை மறைக்கக் கூடும்; திரித்திருகக் கூடும்.1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம்தான் நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை பெறச் செய்தது. இன்றைய நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. இதுவே 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சட்டப்படி உரிமை இல்லை! இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப்பட்ட நிலை என்றால், பெரியார் காலத்தில் கேட்கவா வேண்டும் ?

ன்றைக்கும் எண்ணிப் பார்த்தால், நம் பாட்டிகளுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் சொத்து இருக்குமோ என்னவோ தெரியாது; ஆனாலும், வசதி வாய்ப்புக்கு ஏற்ப நம் பாட்டிகளின் புகுந்த ஊரில், தாத்தா வழி வந்த சொத்துக்கள் இருகக்கூடும்.

இப்படி இருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிடர் கழகத்தின் சொத்தையும், தந்தை பெரியாரின் கொள்கையையும் பாதுகாக்க  தந்தை பெரியார் எடுத்த சட்டப்படியான நடைமுறை நடவடிக்கையே 'அன்னை மணியம்மையார்'


இன்றும் கூட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் விசா காரணங்களுக்காக சட்டப்படியான திருமணப் பதிவை முன் கூட்டியே ரிஜிஸ்டர் செய்வது வழக்கம். பின்னொரு நாளில் சமுதாயத்துக்கு அறிவிக்கும் திருமண நாள் என்பது நடைமுறை வாடிக்கை !

"ஏனப்பா? இப்படி செய்கிறீர்களே ?! இப்படி செய்யலாமா ?! இது வைதிகத்திற்கும் வேதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எதிரானது என்று யாராவது எள்ளலுடன் துள்ளலுடன் கேள்வி கேட்ககே கூடாது ! மூச் !"

"அது வசதிக்காக செய்து கொள்வது. இப்பல்லாம் யார் சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கிறார்" என்று கூறுவார்கள்.

அப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் ? நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு  தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.

நல்லது ! எப்படியோ முற்போக்கடைந்தால் நல்லதுதான் !


ந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரை சட்ட வசதிக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். 
தன் அசதிக்காகவோ தன் வசதிக்காகவோ அல்ல;
தமிழ் இனம் தன்மானம் அடைய வேண்டும் எனும் சமுதாய வசதிக்காக !

 

இப்போது புரிகிறதா? தந்தை பெரியாரின் சுய மறுப்பின் மகுடம் எது என்று?

இல்லறத்தில் இருந்து துறவியாய் வாழ்ந்த இந்த இரு தியாக செம்மல்களைத்தான் பார்ப்பன ஏடு ( குமுதம் ரிப்போர்ட்டர்) பாம்பெடுத்து படம் ஆடி இருக்கிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்தவுடன், ஏசினோர் ஏராளம்; பேசினோர் பற்பலர் !

கால ஓட்டத்தில் தந்தை பெரியாரின் கணிப்பே மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

அன்று ஏசினோர், பின்னர் அன்னையை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்று புறம் பேசினோர், பின்னர் அன்னையை போற்றச் செய்தார்கள்.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

அவற்றையெல்லாம் அடுக்கினால் இந்தக் கடுரையின் நீளம் இன்னும் நீளும்!

முத்தாய்ப்பாக ஒன்றை சொன்னால்
ஆரியக் கூட்டம் நடு நடுங்கும்!
பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கும்!
சூழ்ச்சி நரிகள் சற்றே நெளியும்!
அதுதான் இராவண லீலா !
இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்பது.




கதையின் படியே, கோழையான, மறைந்திருந்து தாக்கும், பெண்களைக் கொன்ற ( தடாகை, சூர்ப்பனகை ), தேவர்கள் செய்யும் அராஜக உயிர்க் கொலை யாகங்களைப் பாதுகாத்த, பூதேவர்கள் எனும் பார்ப்பனர்களைத்  தவிர சூத்திரன் அறிவுப் பெறக் கூடாது என்று சம்பூகனைக் கொன்ற இராமனுக்கு இராம லீலா இருக்கும் போது,

வீரனான, தேவர்கள் செய்யும் உயிர்க் கொலைகளைக் கண்டித்து அது தவறு நடக்கக் கூடாது என்று தடுத்த 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய  உயிர் நேயம் மிக்க; அறிவில் ஆற்றலில் சிறந்த,  தன் குடும்பப் பெண்களைக்  ( தடாகை, சூர்ப்பனகை ) கொன்ற  இராமனை பழி வாங்க, இராமனின் மனைவியை கொணர்ந்தும் கடைசி வரை சீதையைப் பாதுகாத்த இராவணனுக்கு   இராவண லீலா இருக்கக் கூடாதா ?


இப்படி, இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றததிலும் உத்தரவு வாங்கியவர்கள் யார் தெரியுமா ?

அவர்கள் தான், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் !




இப்போது பெருகிறதா அன்னை யார் என்று ?

ஆம்! அன்னை மணியம்மையார் அவர்கள்தான் !


உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



Saturday, June 2, 2012

இளை(சை)யராஜா !!




ளையராஜா - இசை சாம்ராட்.

இளையராஜா இசைக்கு இசையாதோர் யாரோ ?

இளையராஜா சுவாசிப்பது காற்றை அல்ல, இசையை !

மிகச் சிறந்த இசைக்கருவிகள் உதவியோடு தன் இதயத்தில் உதித்த இசையை மக்கள் இன்புற வெளியிட்டு விட்டு, அந்த இசைக்கு அவர்கள் வைத்த பெயர் 'ஒன்றும் இல்லைங்க வெறும் காத்து ', அதாவது 'Nothing But Wind'.

அப்படி இல்லை என்றால், சிறந்த இசைப்பாடல்களை தந்து விட்டு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் வைத்த பெயர், 'எப்படிப் பெயர் வைப்பது ', அதாவது 'How to Name it ?' எனவாக பெயர் வைத்தார்கள்.

லைஞர் அவர்கள் ஒருவருக்கு பெயர் சூட்டுகின்றார் என்றால் அதில் எப்போதும் ஒர் ஆழமான பெயர்க் காரணம் இருக்கும். அந்த பெயர்க் காரணமும், பெயர் சூட்டப் படுபவரின் செயல்க் காரணத்தை அடிப்படையாய்க் கொண்டு இருக்கும். கலைஞர் எப்போதும் சும்மாப் பேருக்கு பெயர் வைப்பவர் இல்லை. இதை நாம் உண்மை என்று உணர்ந்து கொள்வதற்கு, கலைஞர் இளையராஜாவுக்கு சூட்டிய 'இசைஞானி' எனும் பட்டமே சாட்சி!

இளையராஜா, தேனி மாவட்டம் தந்த, பண்ணையப்புரம் பெற்று எடுத்த இசைப் புத்தகம். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க ஆனந்தம். ஆம், இவரும் கிராமத்துக் குயில்தான்.

வைக்கத்தில் உள்ள கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களில், இந்து மதத்தின் கொடுமையால், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நடக்கக் கூட உரிமை இல்லாது இருந்தது. தந்தை பெரியார் தமிழகம் முழுதும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போத ஒரு கிராமத்தில் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தந்தை பெரியாருக்கு ஒரு தந்தி வருகிறது. தந்தி என்னவென்றால்? வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மீட்புக்கு தலைமை ஏற்க வேண்டும் எனும் தந்திதான் அது. அந்த கிராமம் வேறு ஒன்றும் இல்லை - பண்ணையப்புரம்தான் அந்தக் கிராமம்!


நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்து மூன்று இளைஞர்கள் கனவுகளை மட்டும் கை இருப்பாய் கொண்டு, தங்கள் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து,உழைப்பை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு,சென்னை நகரம் வந்தனர். அவர்களை தமிழ்த் திரை உலகின் மும்மூர்த்திகள் எனலாம், அவர்கள் இளையராஜா, வைரமுத்து மற்றும் பாரதிராஜா.,

அவர்களுக்குள் இருந்தது திறமை மட்டும் அல்ல, வெறி. திறமைகளை வெளிப்படுத்த வெறி.இவர்களில் இளையராஜா, முத்தமிழாம், இயல் இசை நாடகத்தில், இரண்டாம் தமிழாம் இசைத் தமிழை பெருமைப் படுத்தி உள்ளார்.

அக்கால இளைஞர்களுக்கு 'அன்னக்கிளி' ஆகட்டும், மத்தியகால இளைஞர்களுக்கு 'தேவர் மகன்' ஆகட்டும், இக்கால இளைஞர்களுக்கு  'நீதானே என் பொன் வசந்தம்' ஆகட்டும், அன்றும் இன்றும் என்றும் அவர் இசையில் ராஜா தான்.
இசை உலகின் முடிசூடா மன்னன்; இனிய ராஜா; இசை ராஜா தான் இளையராஜா.
அவர் 'இசை மேஸ்ட்ரோ', 'இசை மேதை'. இளையராஜாவுக்கு இசை தான் எல்லாம்.

காலத்தை பிரித்து அறிய கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று கூறி விடலாம். தமிழ்த் திரை இசையைப் பிரிக்க இ.மு. என்றும் இ.பி என்று கூறலாம்.
இ.மு - இளையராஜாவுக்கு முன்.
இ.பி - இளையராஜாவுக்கு பின்.


மிழகத்தில் எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் கதை திரைக்கதை தயாரிப்பாளர் வசனம் இயக்குனர் போன்ற பெயர்கள் மாறி மாறி வந்து கொண்டு இருந்தன, ஆனாலும் இசை என்ற பெயருக்கு மட்டும் மாறாமல் இருந்த ஒரு பெயர் இளையராஜா!

'திருவாசகம்' தமிழ் புத்தகத்தில் மட்டும் கேள்விப் பட்டு இருந்த இளைஞர் கூட்டத்திற்கு, அவர் இசையின் மூலம் மீண்டும் வெளிச்சம் காட்டி இருக்கின்றார். இளையராஜா இசைக்கு உருகாதோர் ஒரு இசைக்கும் உருகார்.

ஜாதிப் பிரிவினை பார்ப்பதே தப்பு. இதிலும் சாதிப் பிரித்து திறமை பார்ப்பது மகாக் கேவலம்.இதற்கு மேலும் ஜாதி த்வேஷம் பாத்துண்டே திறமை மதிக்காதவாள் தலையில், வங்கக் கடலில் விழ வேண்டிய இடிகள் நங்கென்று நெஞ்சில் விழக் கடவதாக. வங்கக்கடல் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறது என்போருக்கு, சொல்லிக் கொள்வது, வங்கக் கடல் தூரத்தில் தான் இருக்கிறது, ஆனால் அந்த இடிகள், கூகிள் மேப் (Google Map ) உதவியோடு உங்களைக் கண்டு பிடித்து விடக் கூடுவதாக.

ஒரு சில புல்லுருவிகள் அவர் அந்த ஜாதி, இந்த ஜாதி என்று அவரைச் சிறுமைப்படுத்தப் பார்க்கின்றனர். அப்படிப் பட்டோர்க்கு தாழ்மையான வேண்டுகோள். 'அடப் பதர்களே ..... இளையராஜாவின் இசையை இரவில் கேட்டு நிம்மதியாய் தூங்கும் அற்ப மானிடர்கள் நீங்கள், அவரையே ஜாதிப் பிரித்து ஏசும் நீங்கள் தான் எண்ணத்தால் கீழ்ப்பிறவி.'

தாளங்களும் ராகங்களும் இவர் கடைக்கண் தங்கள் மேல் படுமா என்று ஏங்கித் தவிக்கின்றன. அவர் வாங்கிய விருதுகள் ஏராளம். ஆனாலும் அவர் விருதுக்கு இசைப்பவர் அல்ல. விருதுகள் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. விருதுகள் அவருக்கு 'சிறு பொருள்' அவ்வளவு தான். அவர் உலகம் தனி உலகம்; தான் பெற்ற இசையைப் பெருக இவ்வையகம் என்பதுதான் இளையராஜா.


ளையராஜா தன் மானசீக குருவாக கொள்வது மூவரை, அவர்கள் மேல் நாட்டு இசை மேதைகள் Beethoven, Bach மற்றும் Mozart.

மேதைகளின் திறமைகள் இன்று இரவு படுத்து நாளை காலை விழிக்கும் போது உருவாவது இல்லை. அதாக பட்டது தமிழ் திரைப்படங்களில் வருவது போல் ஒரே பாடலில், அதுவும் ஐந்து நிமிடத்தில் வருவதும் இல்லை.
மேதைகளின் திறமை தினம் தினம் பட்டைத் தீட்டப்பட்டு, பின் பல நாள் கழித்தே பார் அறியும் வண்ணம் வரும். இளையராஜாவும் இப்படித்தான். தன் 14வது வயதிலேயே நாடோடி இசைக்குழுவில் சேர்ந்து தென் தமிழகத்தைச் சுற்றி வந்தவர். பல ஆண்டுகள் கழித்தே அவர் இசைப் புகழ் தமிழ் நாடறியும் வண்ணம் வந்தது.

இப்போது உலகறியும் வண்ணமாய், BBC -யில் உலகின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக, இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா இசை அமைத்த நானூறாவது திரைப்படம் நாயகன், ஐநூறாவது படம் அஞ்சலி.
ஆயிரம் எப்போது வரும் என்று நாம் காத்து கொண்டு இருகின்றோம்.

உணவிற்கு பெயர் பெற்ற சரவணா பவன் ஹோட்டலுக்கு, பின் மாலைப் பொழுதில் சென்ற பொழுது, உணவு விடுதியில் இளையராஜா பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு இருந்தது.
என்ன இனிமையான பாடல்கள் .. எல்லாம் முத்தான பாடல்கள்....
அய்யன் வள்ளுவர் கூறியது,
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
வள்ளுவன் கூறியது கேள்வி செல்வம் என்றாலும், நாம் அப்போது இரு செவியையும், இருக்கும் ஒரே இதயத்தையும் இளையராஜாவிடம் கொடுத்து விட்டு, சர்வரிடம் ஒரு தோசை சொல்லியாயிற்று. தோசை வர தாமதம் ஆயிற்று. அதைப் பற்றி நமக்கேன் கவலை, அதுவும் இளையராஜா இசைத்து கொண்டிருக்க.
திடீரேனே ஒரு தடங்கல்; வேறென்ன, தோசை வந்து விட்டது. தட்டு தடால் என மேஜையில் வைக்கப் படுகிறது. ஒரே அபஸ்வரம் ... இருந்தாலும் பொறுத்துக் கொண்டு இசையை அனுபவித்து கொண்டே உண்கிறோம்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து சர்வர் வருகின்றார், இசையின் நடுவே, வேறு எதுவும் வேண்டுமா என்று வினவுகின்றார். நாம் ஒன்றும் வேண்டாம் என்கின்றோம். இசையை ரசித்து கொண்டே உணவை உண்டு முடித்த பின்னும் சர்வர் இசையை இடை மறிக்கும் விதமாய், 'வேறென்ன சார்' என்கின்றார்.
நாமோ பொறுமை இழந்து, 'இப்போ சாப்பிட்ட பில்லை கான்செல் பண்ணி விடுங்கள் சார்' என்கின்றோம். சர்வர் நகர்ந்து செல்கின்றார்.

நாம் மீண்டும் இசையை ரசிக்கின்றோம்!

இயற்கை என்றுமே அவர் இசைக்கு இணைந்து கை கொடுக்கும். எங்கெல்லாம் வார்த்தை வெற்றிடம் வருகின்றதோ, அங்கெல்லாம் ஓரமாய் ஒரு குயில் குதூகலமாய் கூவிக் கொண்டு இருக்கும். ஒரு மயில் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டும் இருக்கும்.


சில இசை அமைப்பாளர்களுக்கு மின்சாரம் இல்லை என்றால் இசை அமைக்க முடியாது, ஏன் என்றால் அவர்கள் மேற்கத்தியக் கருவிகளைச் சார்ந்திருப்பதால். அதிலும் சில இசை அமைப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மின்சாரமும் வேண்டும், ஆங்கில இசை குறுந்தகடுகளும் வேண்டும், கூடவே கூகுள் (Google) வேண்டும். பின்னே இசையை எங்கே தேடுவதாம். நீங்களா அவருக்கு இசை அமைத்து கொடுப்பீர்கள்.ஆனால் இளையராஜாவால் மின்சாரம் இருந்தாலும் இல்லா விட்டாலும் இசை அமைக்க முடியும். அவருக்கு கருவிகள் ஒரு பொருட்டே அல்ல. அந்த ஹார்மொனியும் மட்டும் போதும். இன்னும் சுருங்கச் சொன்னால் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினை இளையராஜாவின் இசையை சற்றும் குலைக்க முடியாது.

அது யாருப்பா ? அங்க பின்னாடி இருந்து குரல் கொடுப்பது; "அதான் இளையராஜா லண்டன் போயிட்டாரே! அங்க எப்படி கரண்ட் கட் ஆகும்?" என்று !!!


ள்ளுவன் வாக்கு என்ன வெனில்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. என்கின்றார்.

இந்த குறளை இளையராஜாவிற்காக முன் செருகல் சேர்த்தால்,
இசை ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
அதாகப் பட்டது, இசையை கொடுப்பது, அதனால் புகழுடன் வாழ்வது ; இதை விட ஓர் உயிர்க்கு பயன் உள்ளது வேறேதும் இல்லை. எனக்கூறலாம்.


மிழ் பண்பாட்டுக்குக் காப்பான, தமிழர் உரிமைக்கு போர்வாளான, தமிழர் மான மீட்புக்கு உதவியான, தமிழர் பெருமைக்கு சான்றான 'திருக்குறள்' இலக்கியத்தை இளையராஜா இசையில் கேட்டால் எப்படி இருக்கும்? என்று அவா எழுவதுண்டு. மேதைகள் எளியோர் அவாவுக்கு இசைபவர்கள் இல்லையே ! என்றாவது திருக்குறள் முழுமைக்கும் இசை ஞானி இசையில் கேட்கும் வாய்ப்பு பெற்றால் தமிழ்ச் சமுதாயத்துக்கு இசை ஞானி செய்யும் மிகப் பெரிய சேவையாக அது இருக்கும் !

இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு பாரத ரத்னா கொடுத்து இந்திய அரசு தன்னை கௌரவப் படுத்திக்கொள்ள வேண்டும்!

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்