Tuesday, April 3, 2012

ராம் செத்தா'ராம்'



ற்பனை கதாபாத்திரமான ராமால், சேதாரம் அதிகம்; அதற்கு ஆதாரம் : பாபர் மசூதி இடிப்பு, மதக்கலவரம், மனித உயிர்கள் இழப்பு. கற்பனை கதாபாத்திரமான ராமால், ஆதாயம் குறைவு; அதற்கு ஆதாரம் : சேது சமுத்திர திட்டம்.

கடப்பாரை கொண்டு மசூதியை இடித்த காவித்தீவிரவாதிகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்; "தாங்கள், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்'" என்று. அதாவது, தங்களைக் கேள்வி கேட்க; தவறைச் சுட்டிகாட்ட; யாருமே இல்லை என்ற இறுமாப்பு நிலை.

'புத்தியற்ற காவிப் பதர்கள்' செய்த மசூதி இடிப்பை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

இந்து மதத்தின் மனு சாஸ்திரத்தில் உள்ளபடி  வர்ணாஸ்ரம தருமம் என்னவெனில்:
கற்பனை கதாபாத்திரமான பிரம்மாவின்- 
1) முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பணன்; கற்பனையான முதல் ஜாதியாம் :(
2) தோளில் பிறந்தவர்கள், சத்ரியன்; கற்பனையான இரண்டாம் ஜாதியாம் :(
3) தொடையில் பிறந்தவர்கள், வைசியன்; கற்பனையான மூன்றாம் ஜாதியாம் :(
4) காலில் பிறந்தவர்கள், சூத்திரன்; கற்பனையான நான்காம் ஜாதியாம் :(

இதற்கும் கீழே 'பஞ்சமர்' என்றெல்லாம் பிரித்து வைத்திருகிறார்கள் 'புத்தியற்ற காவி பதர்கள்' :( :( :( :(
இந்தப் படி நிலைக்கும்  கீழே பெண்கள் எனும் நிலையை கொண்டது இந்து மதம்.

இராமாயண கற்பனை கதையில், சம்பூகன் எனும் சூத்திரன் தவமிருந்தானாம். அப்படி தவமிருந்தவனை, ராமன் எனும் கற்பனை கதாபாத்திரம், தலையைக் கொய்து கொன்றான். எப்படி இருக்கிறது நியாயம்? ராமன் ஏன் கொன்றான் ? இந்து மத தர்மத்தின்படி சூத்திரன் தவம் செய்யக்கூடாதாம். தவம் உண்மையோ பொய்யோ அதை பிற்பாடுப் பார்ப்போம். ஆனாலும், கற்பனை கதைப்படியே எடுத்துக் கொண்டாலும், சூத்திர சம்பூகனைக் கொல்ல, கற்பனையான முதல் ஜாதியான பார்ப்பணன் ராமனுக்கு எவன் உரிமை கொடுத்தான்? இதுதான் இந்து மதம் தூக்கிப் பிடிக்கும் ஜாதிய அடிமைத்தனம். இது என்ன ஓரவஞ்சனை, ராமன் மட்டும் கற்பனை கதாபாத்திரம், சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் இல்லையா? என்று வருத்தம்கொள்ளத் தேவையில்லை. சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான்.

எப்போது சம்பூகன் கற்பனை கதாபாத்திரம் என்றால்?, ராமன் எப்போது கற்பனை கதாபாத்திரம் என்ற உண்மை ஏற்கப்படுகிறதோ, அக்கணமே சம்பூகனும் கற்பனை கதாபாத்திரம்தான் !

திராவிட இயக்கத்தின் பயனால் கல்வி கற்றுவிட்டு, கணினியில் உட்கார்ந்து கொண்டு, கை நிறைய சம்பாதிக்கும் பலர் கூறுகிறார்கள்; 'உன்னை யார் அதை எல்லாம் பார்க்க சொன்னது? இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளமிருக்கிறதே' என்று. சாக்கடையில் எவ்வளவு நல்ல விஷயம் இருந்து என்ன பயன்? என்பதுதான் நமது கேள்வி.

அது எப்படி, 'இந்து பயங்கரவாதிகள்' என்ற வார்த்தையைக் கூறலாம்? என்றால்; யாரை இந்து பயங்கரவாதிகள்? என்று குறிப்பிடுகிறோம் என்றால் :
- வர்ணாஸ்ரம தருமத்தை, சிரமப்பட்டாவது 'எப்பாடு பட்டேனும் பிற்பாடு புகுத்துவோர்'.
- ஜாதி எனும் சாக்கடையை நிலை நிறுத்துவோர். கல்வியாலும், அறிவாலும், உழைப்பாலும் சாதித்து முன்னேற விரும்புவோரை அடக்க, சாதியை ஒரு கருவியாய் பயன்படுத்துவோர்.
- தீண்டாமையை ஆதரிப்பவர். மனிதனை மனிதனாய் பார்க்காமல் மிருகத்தினும் கேவலமாய் நடத்துவோர்.
- தனிப்பட்ட கருத்தை, தன்னுடைய ஆதாயத்திற்காக, அதாவது சுயநலத்திற்காக பிறர்மேல் தினிப்போர்.
இவை மட்டும் நிலையான பட்டியல் இல்லை; இவை நீளும் கூட.

நீங்கள் மேற்கூறிய பட்டியலில் இல்லை என்றால், உங்களுக்கு ஏன் வீன் எரிச்சல்? மாறாக, இந்த பட்டியலில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். இது தந்தை பெரியார் காண விரும்பிய அறிவு யுகம். அறிவு யுகம், அதன் ஆழத்தை அடைவதற்கு முன்னர், அலையாய் ஆர்ப்பரிக்கும் காலம் இது. இப்படி அலை ஆர்பரிக்கும் காலத்தில், இவ்வளவு நாளாக மேற்கூறிய இந்து பயங்கரவாதத்தன்மையை வெளிபடுத்தியவர் யாராயினும்; அவர்களையும், அவர்கள் சேர்ந்தோர் மேலும் இயல்பாகவே பாய்ச்சல் வரும். 

நீங்கள் நேர்மையானவர் என்றால் உங்களை நீங்களே மெச்சிக் கொள்ளலாம்! நம் பாராட்டுகளும் கூட!

ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை, வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அயோத்தியாதான் ராம் என்ற அந்த கற்பனை கதாபாத்திரத்தின் பிறந்த ஊர், என்று ஊகித்து எடுத்துக்கொண்டால் கூட; பல நூறு வருடமாக இருக்கும் ஒரு மசூதியை இடிக்க இந்த கற்பனையான ராம (க்)தர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புத்த விஹாரங்கள் பலவற்றை அழித்து அதன் மேல் கோவில் கட்டியதாக வரலாற்று ஆதாரங்கள் இருகிறதே! அப்படி என்றால், அழிக்கப்பட்ட புத்த விஹாரங்கள், மீண்டும் அதே இடங்களில் உருவாவதை இந்த கற்பனையான ராம ப(க்)தர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தானே! கற்பனையான ராம (க்)தர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

ராம் என்ற கற்பனை கதாபாத்திரம் எங்கே பிறந்தார் என்று, ஏன் இவ்வளவு கேள்வி?
கற்பனை கதாபத்திரம் என்பதால் மூளையில்தான் பிறந்திருப்பார் :) ! அப்படி என்றால் ராம் ஜென்ம பூமி என்பது மூளையை அல்லவா குறிக்கும்?



[அதற்கும் மேல் பதில் வேண்டுமானால், உயிரியல் (zoology) புத்தகத்தைப் படித்தால், ராம் எங்கு பிறந்திருப்பார் என்று விளக்கம் கிடைக்கும். அல்லது கனிவான gynecologist-டிடம் விசாரிக்கலாம் !  இதற்கு மேல் வாயைப் பிடுங்காதீர்கள்! ஆமாங்கானும் :) :) ! ]


ராம் என்ற பெயரை தொடர்பு வைத்துதான், இன்றைய தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா தளமும் வளர்ந்திருக்கிறது. எப்படி என்றால்? 
காங்கிரசை வளர்த்தது காந்தி; காந்தி விரும்பியது ராம ராஜ்ஜியம்.
காந்தியை சுட்டது கோட்சே; கோட்சே சார்ந்தது ஆர்.எஸ்.எஸ்; 
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவுதான் பாரதிய ஜனதா தளம்.
கோட்சே 'சுட்டாராம்'; காந்தி 'செத்தாராம்'!
'சுட்டாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியாகவும்; 
'செத்தாராம்' கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியாகவும் வளர்ந்து இருக்கிறார்கள் :) :) (உபயம் : பெரியார் தாசன்)

தமிழகம், எந்த மத ரணத்திற்கும் ஆளாகாமல், அமைதியாக இருப்பதற்குக் காராணம், ராம் எனும் கானல் நீரான மாயத்தோற்றத்தை கண்டு மதிமயங்காமல் இருப்பதால் தான்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய் விடும். இது எப்படி என்றால்? இதனை ஆங்கிலத்தில் mutual exclusion semaphore என்பார்கள். அதாவது, ஒரு நாணயத்தை சுண்டி விட்டால், பூ விழுமா? தலை விழுமா? ஒரு நேரத்தில் 'பூ' விழலாம். மற்றொரு நேரத்தில் 'தலை' விழலாம். 'பூ' விழுந்தால் 'தலை' விழாது; 'தலை' விழுந்தால் 'பூ' விழாது.

தந்தை பெரியார், சமூகத்திற்கு தந்த  mutual exclusion semaphore : 'புத்தி' வந்தால் 'பக்தி' வராது. 'பக்தி' வந்தால் 'புத்தி' வராது.



[ 'எப்போதுமே தலை விழுந்தால்? அந்த நாணயம், தல அஜித்தின் 'மங்காத்தா' நாணயம்' :) :) ]

புத்தி இஸ் inversely proportional to பக்தி. பக்தி எப்போது இல்லாமல் போகிறதோ அதாவது சூநியமாகிறதோ, அப்போதுதான் மனிதனின் அறிவு இன்பினிட்டி தொட இயலும்.
புத்தி = k * ( 1 / பக்தி)
எப்போது, பக்தி = 0 ஆகிறதோ,
அப்போது, புத்தி = infinity ஆகிறது!

மாறாக, புத்தியை பூஜியமாக்கினால், ஹர ஹர நித்யானந்தா ஆகலாம்; கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள, அதாவது 'Accused ஆச்சாரியார்' சங்கராச்சாரியார் ஆகலாம். அல்லது, கொலைக் குற்றவாளி பிரேமானந்தா ஆகலாம். அல்லாமல், பக்தியும் புத்தியும் விகிதாசாரத்தில் (proportionate) இருப்பவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, அரசியல்வாதியையோ, நடிகரையோ தலைவனாய் கொண்டு, பாலாபிஷேகம் பண்ணலாம் :) :) பீராபிஷேகம் செய்யலாம். கல்லை இளநீரிலும் எலுமிச்ச தண்ணியிலும் குளிப்பாட்டலாம்.

வெளிநாட்டுகாரர்கள் கட்டுமானப் பணியை (construction), ஆட்களை குறைவாக வைத்து, எப்படி செய்யமுடியும் என்று பார்க்கிறான். கற்பனையான ராம (க்)தர்களோ எவ்வளவு கூடுதலான கூட்டம் வைத்துக்கொண்டு பாபர் மசூதியை இடிப்பு (destruction) வேலையைச் செய்திருக்கிறார்கள். சொல்லுங்கள் நீங்களே; கற்பனை கதாபாத்திரமான ஸ்ரீ ராமனால் சீரழியலாமா இந்தியா? காவித்துணி அணிந்து, அமைதி வழியில் நடப்பவர்கள் என்று வாயால் மட்டும் சொல்லிக் கொள்கின்றவர்கள், ஒன்றுகூடி ஒரு மசூதியை இடித்தது காவித் தீவிரவாதமா இல்லையா ?

குத்தறிவாளர்களும், மனிதநேயவாதிகளும், மற்றும் கடவுள் எதிர்பாளர்களும் கூறும் சிந்தனை இதில் அவ்வளவும் ஏற்புடையது. இன்றைய தேதியில், அதுவும் இந்த அறிவு யுகத்தில் கடவுளாலும், மதத்தாலும்தான் அமைதி பெருவாரியாக குலைகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா? இவற்றை முன்னிட்டுதான், தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயம் வளர, சகோதரத்துவம் வளர, சமத்துவம் அடைய வேண்டுமானால்; கடவுள், மத, ஜாதி, மூடப்பழக்க வழக்கங்களை வேரோடுக் கிள்ளி எறிய வேண்டும் என்று, தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். வாழ்நாள் முழுதும் என்பது கூட தவறுதான். ஏனென்றால், பிறக்கும் போதே இந்த புனித செயலுக்காதான் பிறந்தாரா? என்ற எதிர் கேள்வியை இது உருவாகக்கூடும். ஆகையால், பெரியார் அவர்கள் தன்னுடைய பட்டறிவால் உணர்ந்து தெளிந்தது முதல், கற்பனையான கடவுள், மதம், ஜாதி, மூடப்பழக்கவழக்கங்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று தன்வாழ் நாள் முடியும்வரை பாடுபட்டார்.

மூத்திரப் பையை தூக்கி கொண்டும் ஊர் ஊராகச் சென்று, இந்து மத பொய் சாஸ்திரங்களில் மறைந்திருக்கும் சூழ்சிகளை எடுத்துக்காட்டி, பகுத்தறிவை பரப்பினார் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், மனித சமுதாயம் முழுமைக்காக உழைத்தார் தந்தை பெரியார். பெரியார் இல்லை என்றால், நாம் இன்றைய நிலை அடைந்திருக்க முடியுமா?!


பெரியார் பிறந்த மண்ணில், காவித் தீவிரவாதிகளை 'கெடுப்பார் இலானும் கெடும்' என்பதை உணர்ந்து கொள்வார்கள் !

உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



1 comment:

  1. அருமையான ஆய்வு. புத்திக்கும் பக்திக்கும் வேறுபாடு காட்டியது சூப்பர். அப்படியே ராமனை வைத்து தீவிரவாதம் செய்பவர்களை போல அல்லாவை வைத்து தீவிரவாதம் செய்யும் முஸ்லிம் கயவர்களுக்கும் அடுத்த பதிவில் சாட்டையடி போடுங்கள். எல்லா மதமும் மதம் பிடித்து அலைகின்றன.

    ReplyDelete