காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம்.
அக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும் அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் 'அம்மா'வாக இருக்கலாம்.
ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம்.
சில காலங்களுக்கு முன்னர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றி கூறிய ஒரு செய்தி மிக சுவாரசியமாகவும் - ஆகா ! இவ்வளவு சுய மறுப்பாளரா தந்தை பெரியார் எனும் பிரமிப்பே மேலோங்கச் செய்தது.
தந்தை பெரியார் அவர்கள், இந்து மதத்தில் உயர் ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தார்; ஆனாலும், காலம் முழுதும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியின் முன்னேற்றதுக்கு உழைத்தார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், செல்வமும் சொத்தும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். ஆனாலும், காலம் முழுதும் ஏழைகளுக்காகவே பாடுபட்டார். தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கே செலவு செய்தார்கள்.
தந்தை பெரியார் அவர்களை, கன்னடர் என்றும் தெலுங்கர் என்றும் கொச்சைப் படுத்தினார்கள். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அந்தக் கொச்சைப் படுத்தலைப் புறந்தள்ளி, தமிழர்-தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.
என்ன! தந்தை பெரியார் அழகு தமிழில் அடுக்கு மொழியில் பேசத் தெரியாதவர்; கொச்சைத் தமிழில் நடைமுறையில் நடப்பவற்றை உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கூறுவார்கள். ஆனாலும், அந்த கொச்சைத் தமிழ்தான் தமிழரைத் தன்மானம் பெற வைத்தது.
தந்தை பெரியார் ஆணாகப் பிறந்தார்; ஆனாலும் காலம் முழுதும் பெண்ணின் உரிமைக்காக ஓடி ஓடி உழைத்து கொட்டித் தீர்த்தார்கள்.
பாரதியார் கூட பெண் உரிமைக்காக வெறுமே பாடினார். தந்தை பெரியார் அவர்களோ பெண் விடுதலைக்காக, பெண் உரிமைக்காக கிராமம் கிராமமாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்.
ஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருந்து ஈ.வெ.ராமசாமி ஆன நம் தலைவருக்குத்தான், பெண்கள் மாநாடு கூட்டி "பெரியார்" என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள், உயர் ஜாதி என்று சொல்லப் படுவதான, பணக்காரன் என்கிற, பிற மொழிக்காரர் என்கிற, ஆண் என்கிற அனைத்து தளத்திலுமே ஒரு சுய மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் !
என்னே ஓர் ஆச்சரியம் ! இப்படிப் பட்ட ஒரு சுய மறுப்பளரை இந்த உலகம் கண்டதுண்டா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள் !
இன்னும் கூற வேண்டுமானால், காங்கிரசில் சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று தான் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்கள். அடடா! இதுவன்றோ பதவி மறுப்பு ! இன்றைக்கோ, பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் என்றாலும், பல்லிளித்துக் கொண்டு தாஜா செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் !
மதராஸ் ராஜதானியை ஆட்சி செய்யும் பெரும் பதவி இரண்டு முறை பெரியாரை நோக்கி வந்தது. வந்த பதவி பூமராங் போல திரும்பிச் சென்றது. இரண்டு முறையும் அந்தப் பதவியை துச்சமென மதித்து ஏற்க மறுத்தார்கள்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள் !
இவற்றையெல்லாம் கேட்டு மலைப்பாய் இருக்கிறதா ?!
பொறுங்கள் ! இன்னும் இருக்கிறது !
இவ்வளவு சுய மறுப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் ஒரு சுய மறுப்பு இருக்கிறது ! அந்த சுய மறுப்புதான் உலக இயற்கையின் கடும் சவால். அந்த சுயமறுப்பை வாழ்ந்த தியாகச் செம்மல்கள் யார் தெரியுமா ?!
இது ஏதடா, இதுவரையில் தந்தை பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இப்போது "செம்மல்கள்" என்று பன்மையில் கூறுகிறானே என்று எண்ணுகிறீர்களா ?!
அந்த தியாகச் செம்மல்கள் யாவர் தெரியுமா? அவர்கள்தான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் !
நம்மவர்களில் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை; வழக்கம் போல பார்ப்பனப் பத்திரிகைகள் வரலாற்றை மறைக்கக் கூடும்; திரித்திருகக் கூடும்.1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம்தான் நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை பெறச் செய்தது. இன்றைய நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. இதுவே 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சட்டப்படி உரிமை இல்லை! இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப்பட்ட நிலை என்றால், பெரியார் காலத்தில் கேட்கவா வேண்டும் ?
இன்றைக்கும் எண்ணிப் பார்த்தால், நம் பாட்டிகளுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் சொத்து இருக்குமோ என்னவோ தெரியாது; ஆனாலும், வசதி வாய்ப்புக்கு ஏற்ப நம் பாட்டிகளின் புகுந்த ஊரில், தாத்தா வழி வந்த சொத்துக்கள் இருகக்கூடும்.
இப்படி இருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிடர் கழகத்தின் சொத்தையும், தந்தை பெரியாரின் கொள்கையையும் பாதுகாக்க தந்தை பெரியார் எடுத்த சட்டப்படியான நடைமுறை நடவடிக்கையே 'அன்னை மணியம்மையார்'
இன்றும் கூட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் விசா காரணங்களுக்காக சட்டப்படியான திருமணப் பதிவை முன் கூட்டியே ரிஜிஸ்டர் செய்வது வழக்கம். பின்னொரு நாளில் சமுதாயத்துக்கு அறிவிக்கும் திருமண நாள் என்பது நடைமுறை வாடிக்கை !
"ஏனப்பா? இப்படி செய்கிறீர்களே ?! இப்படி செய்யலாமா ?! இது வைதிகத்திற்கும் வேதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எதிரானது என்று யாராவது எள்ளலுடன் துள்ளலுடன் கேள்வி கேட்ககே கூடாது ! மூச் !"
"அது வசதிக்காக செய்து கொள்வது. இப்பல்லாம் யார் சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கிறார்" என்று கூறுவார்கள்.
அப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் ? நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.
அப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் ? நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.
நல்லது ! எப்படியோ முற்போக்கடைந்தால் நல்லதுதான் !
தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரை சட்ட வசதிக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.
தன் அசதிக்காகவோ தன் வசதிக்காகவோ அல்ல;
தமிழ் இனம் தன்மானம் அடைய வேண்டும் எனும் சமுதாய வசதிக்காக !
இப்போது புரிகிறதா? தந்தை பெரியாரின் சுய மறுப்பின் மகுடம் எது என்று?
இல்லறத்தில் இருந்து துறவியாய் வாழ்ந்த இந்த இரு தியாக செம்மல்களைத்தான் பார்ப்பன ஏடு ( குமுதம் ரிப்போர்ட்டர்) பாம்பெடுத்து படம் ஆடி இருக்கிறது.
தந்தை பெரியார் அன்னை மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்தவுடன், ஏசினோர் ஏராளம்; பேசினோர் பற்பலர் !
கால ஓட்டத்தில் தந்தை பெரியாரின் கணிப்பே மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.
அன்று ஏசினோர், பின்னர் அன்னையை ஏற்றுக் கொண்டார்கள்.
அன்று புறம் பேசினோர், பின்னர் அன்னையை போற்றச் செய்தார்கள்.
தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.
அவற்றையெல்லாம் அடுக்கினால் இந்தக் கடுரையின் நீளம் இன்னும் நீளும்!
முத்தாய்ப்பாக ஒன்றை சொன்னால்
ஆரியக் கூட்டம் நடு நடுங்கும்!
ஆரியக் கூட்டம் நடு நடுங்கும்!
பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கும்!
சூழ்ச்சி நரிகள் சற்றே நெளியும்!
அதுதான் இராவண லீலா !
இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்பது.
வீரனான, தேவர்கள் செய்யும் உயிர்க் கொலைகளைக் கண்டித்து அது தவறு நடக்கக் கூடாது என்று தடுத்த 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய உயிர் நேயம் மிக்க; அறிவில் ஆற்றலில் சிறந்த, தன் குடும்பப் பெண்களைக் ( தடாகை, சூர்ப்பனகை ) கொன்ற இராமனை பழி வாங்க, இராமனின் மனைவியை கொணர்ந்தும் கடைசி வரை சீதையைப் பாதுகாத்த இராவணனுக்கு இராவண லீலா இருக்கக் கூடாதா ?
இப்படி, இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றததிலும் உத்தரவு வாங்கியவர்கள் யார் தெரியுமா ?
அவர்கள் தான், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் !
உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்
லண்டன்
No comments:
Post a Comment