Thursday, April 12, 2012

பேரிடர் தவிர்த்த திராவிடர் - படம் தரும் சேதி

தம் மனிதனை பண்படுத்தித் இருக்கிறதா அல்லது நாத்திகம் மனிதனை பண்படுத்தி இருக்கிறதா? மதம் காட்டுமிராண்டித்தனமா இல்லையா? நாத்திகம் மனிதநேயமா இல்லையா? இந்தக் கேள்விகளை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ந்தியாவில் இந்து இஸ்லாமிய மக்களின் தொகையயை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
விகிதாச்சாரப்படி இந்துக்கள் சிறும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு:
  1. காஷ்மீர்
  2. பஞ்சாப்
  3. அருனாச்சல பிரதேசம்
  4. நாகாலாந்த்
  5. மெகாலயா 
  6. மிசோரம்
  7. லட்சத் தீவுகள்
ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் இந்துக்களே பெரும்பான்மையினர்.

விகிதாச்சாரப்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. காஷ்மீர்
  2. லட்சத் தீவுகள்
விகிதாச்சாரப்படி கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் வருமாறு: 
  1. நாகாலாந்த்
  2. மெகாலயா 

ந்தியாவில் மதக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை இங்கே படமாகக் காணலாம் : 

மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், 
இந்துக்கள் பெரும்பான்மையான அல்லது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் மதக் கலவரங்கள் நடந்துள்ளன, அமைதியின்மை, மனித உயிரிழப்பு.

ந்துத் தீவிரவாதிகள் முன்னிறுத்தும் பாரதமாதாவை இங்கே படமாகக் காணலாம் :
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், பாரதமாதாவின் திருப்பாதம் தமிழகத்தின் உள்ளே இல்லை. அந்த வகையில், ஒரு குறியீடு போலவே தமிழகம் அமைதி நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

ந்தியாவில் நக்சலைட்கள் பரவியுள்ள மாநிலங்களை இங்கே படமாகக் காணலாம் : 
மேலே உள்ள படத்தின் மூலம் அறிய முடிவது என்ன? என்று பார்ப்போமேயானால், இந்துக்கள் பெரும்பான்மையான மாநிலங்களில்தான் நக்சல் போராளிகள் போராடுகின்றனர். இந்த விஷயத்திலும், தமிழகம் அமைதியான நிலையில் இருப்பதை காணமுடிகிறதா இல்லையா?

வை எல்லாவற்றிலிருந்தும் புரிவது என்ன?  
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நாத்திகர்கள் அதிகம்.  நாத்திகர்கள் எல்லா மதத்தையும் கருத்துக்களால் எதிர்ப்பவர்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்து என்று எந்த மதத்தையும் கருத்துக் கணைகளால் குடைந்து எடுப்பவர்கள் நாத்திகர்கள். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள்.

மண் பண்பட இயற்கை உரம் தேவை; அதுபோல, மனிதன் பண்பட பெரியார் கொள்கைகள் தேவை. பெரியார் கொள்கைகள் என்றவுடனே 'கடவுள் இல்லை' என்பதையோ, 'பிராமணர்களை எதிர்ப்பதையோ' என்பதாக எண்ணிக் கொண்டால், தந்தை பெரியாரை பற்றி முழுப் புரிதல் நம்மிடம் குறைவாக இருப்பதாகத்தான் பொருள்.  

ந்தை பெரியார் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார் சாஸ்திர இதிகாசம் புராணம் போன்றவற்றை எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ?
தந்தை பெரியார்  பார்ப்பனர்களை (பிராமணர்) எதிர்த்தார்களே, ஏன் எதிர்த்தார்கள் ? 
தந்தை பெரியார் 'கடவுள் இல்லை' என்றார்களே, ஏன் 'கடவுள் இல்லை' என்றார்கள் ? 


திராவிடச் சமூகத்தில் உள்ள சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்ற இழிவுகளுக்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். இந்த அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டிருப்பது இந்து மதம் என்பதை புரிந்து கொண்டார்கள். 


ந்து மதத்துக்கு ஆதாரம் என்ன? என்று ஆராய்ந்தார்கள். 
இந்து மதத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை, சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றா ஆதாரங்கள் என்பதைப் புரிந்து கொண்டார்கள். 

ந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் எதற்காக? இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். 
இந்து மதத்தின் சாஸ்திரம் இதிகாசம் புராணம் போன்றவை பார்ப்பனர்களை (பிராமணர்) உயர்நிலையில் வைக்கவே இருப்பதை ஆராய்ந்தும், நடைமுறையிலும் அவை இருப்பதை கண்டுப்பிடிக்கிறார்கள்.


டுத்து, இந்த பார்ப்பனர்கள் (பிராமணர்) எப்படி உயர் நிலையில் இருந்துக்கொண்டு ஏணைய பெரும்பான்மையினரான திராவிட மக்களுக்கு சமுதாய இழிவை ஏற்படுத்துகிறார்கள்? என்று ஆராய்கிறார்கள். பார்ப்பனர்கள் (பிராமணர்), தாங்கள் கடவுளின் படைப்பு, கடவுளால் உயர் ஜாதியினராகப் பிறப்பிக்கப் பட்டவர்கள் என்று கூறுவதையும் அதனை திராவிடர்கள் ஏற்றுக்கொள்வதையும் நடைமுறையில் கண்டுப்பிடிக்கிறார்கள்.




ரி, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம். சமுதாய இழிவுகளான தீண்டாமை, அண்டாமை, பார்க்காமை, ஜாதி, சூத்திரன், பஞ்சமன், கல்வியிண்மை, பெண்ணடிமை போன்றவற்றை களையவேண்டுமானால், அவற்றிற்குக் காரணமான இந்து மதத்தை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த இந்து மதத்திற்கு ஆதாரமான சாஸ்திர இதிகாச புராணங்களை எதிர்த்தார்கள். அதோடு விடவில்லை, அந்த சாஸ்திர இதிகாச புராணங்கள் தூக்கிப்பிடிக்கும்  பார்ப்பனர்களையும் (பிராமணர்) எதிர்த்தார். அதோடும் விடவில்லை அந்த பார்ப்பனர் (பிராமணர்) கூறிக்கொள்ளும் கடவுளின் படைப்பு என்பதை தகர்க்க கடவுளை நிராகரித்தார்கள்.


இவ்வளவு ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரங்களுக்கும் அனுபவங்களுக்குப் பிறகுதான் தந்தை பெரியார் கூறினார்கள் :
"கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை;
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி."


ஆனபோதிலும், 'கடவுள் இல்லை' என்ற தந்தை பெரியாரைத்தான் திராவிடத் தமிழர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்? தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்த பழம். தந்தை பெரியார் தமிழகத்தில் மதக்களைகளை பிடுங்கிவிட்டு, மனிதநேயத்தை  ஆழமாக விதைத்து சீர்படுத்தி வைத்துள்ளார்கள். ஆகையால்தான், நாம் பேரிடர் தவிர்த்த திராவிடர்களாக உலா வருகிறோம்.

வாழ்க பெரியார் - வளர்க பகுத்தறிவு.

--
உண்மையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



1 comment:

  1. அருமையான, உண்மையான பதிவு!!

    ReplyDelete