Friday, March 16, 2012

தினமலர் - பள்ளி பிள்ளைகளின் கல்வியை கேலி செய்கிறதா ?


ப்படிப் பொருட்களை விரயம் செய்து யாகம் செய்தால், அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று யார் கூறியது ? இப்படி யாகம் செய்வதால்தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அதனை எப்படி நிரூபிப்பது ?

ஒரு வேளை, ஏதேனும் மாணாக்கர் தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால், யாகம் செய்தவர் பொறுப்பேற்றுக் கொள்வாரா ? 

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம தர்மம் கூருவது யாதெனில், பிராமணர்கள் (பார்ப்பனர்கள்) பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள், ஷத்ரியர்கள் பிரம்மாவின் தோளில் பிறந்தவர்கள், வைஷியர்கள் பிரம்மாவின் தொடையில் பிறந்தவர்கள், சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள். 

இந்த நான்கு வர்ணத்திர்க்கும் கீழாக பஞ்சமர்கள். பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்கள் எனும் ஆறடுக்கு முறையை உடையது இந்துமதம்.  

இந்தியா சுதந்திரம் அடையும் முன்னர் அரசாங்கப் பதிவுகளில் நம்மையெல்லாம் சூத்திரர்கள் என்றே குறித்திருக்கிறார்கள்.

இந்து மதத்தின் வேதம் மற்றும் மனுசாஸ்திரத்தின் ( மனுதர்மம், மனுநீதி ) படி, சூத்திரர்களுக்கு கல்வி உரிமை இல்லை. 

'நசூத்ராய மதிமம் தத்யா' என்கிற சமஸ்கிருத சுலோகத்தின் பொருள் தெரியுமா
சூத்திரனுக்கு கல்வி உரிமை கிடையாது; இதுதான் இந்த 'நசூத்ராய மதிமம் தத்யா' என்ற சமஸ்கிருத சுலோகத்தின் பொருள்

இப்போது எண்ணிப் பாருங்கள், உங்கள் தாய்தந்தையர் கல்வி அறிவு பெற்றவர்களா ? உங்கள் தாத்தா-பாட்டி கல்வி அறிவு பெற்றவர்களா ? அவர்கள் கல்வி அறிவு பெற்றிருந்தார்களேயானால் மகிழ்ச்சி. நம்மைப் பெற்றவர்கள், கல்வி அறிவு பெற்றவர்கள் இல்லை என்றால் காரணம் ? அதற்குக் காரணம், நம்மவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை மாறி, அனைவரும் கல்வி அறிவு பெறும் நிலையில் இருக்கக் காரணம் ? இந்த கல்வி உரிமைக்குப் பின்னால்  திராவிட இயக்கத்தின்  தியாகம் நிரம்பி வழிகிறது

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக, பலரும் திராவிட இயக்கத்தை குறை கூறுகிறார்கள். அவர்கள் குறை கூறும் அளவுக்கு அவர்களை வளர்த்து ஆளாக்கியது திராவிட இயக்கங்கள்தான். திராவிட இயக்கங்களில் குறைகள் இருப்பின், குறை களைந்து மேலும் முன்னேறுவதுதான் நம் மக்கள் கல்வியில் மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக இருக்கும்.

மீண்டும்'நசூத்ராய மதிமம் தத்யா'-வுக்கு வருவோம். கல்வி உரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இப்போது கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக யாகம்-கீகம் என்று ஏதோ செய்யும் அளவிற்கு வந்திருக்கிறார்கள் பிராமணர்கள். இந்த நிகழ்வே சமூகமாக நாம் முன்னேறுகிறோம் என்பதற்கான ஒரு அடையாளம்

இது போதாது. மூடநம்பிக்கைகளை பரப்பும் பிராமணர்கள் (பார்ப்பனர்கள்), முற்றும் முழுமையாக மூடநம்பிக்கை பரப்பும் வேலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு நாங்கள் பிராமணர்கள் (பார்ப்பனர்கள்) இல்லை, யாரையும் போல் மனிதர்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

யாகம் செய்யும் பிராமணர்கள் (பார்ப்பனர்கள்), தங்கள் வயிறு வளர்க்க வேண்டுமானால், வேறு ஏதாவது தொழில் செய்யலாமே. இப்படி, படிக்கும் பிள்ளைகளிடமா மூடநம்பிக்கையை பரப்புவது ?


உண்மையுடன்
வேதனையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்

நன்றி:

ஆதாரம்: 




No comments:

Post a Comment