Thursday, March 15, 2012

தினமலரும் 'போர்ர்..'ம் !


தினமலரும் 'போர்ர்..'ம் !

தினமலர் தலைப்புச் செய்தி : சேனல்- 4 அல்ல., சானல் போர்ர்., பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை.
பதில் கருத்து : பேஷ்... பேஷ்....... தினமலருக்கு ரொம்பத்தான் 'போர்ர்ர்...' அடிக்கும் .... தினமலர் எதை எதிர்பார்த்தது என்று தெரியவில்லை. கேளிக்கைத் திரைப்படம் போடுவார்கள் என்று எதிர்பார்த்து, கேளிக்கை இல்லாததால் தினமலருக்கு 'போர்ர்ர்...' அடிக்கத்தான் செய்யுமோ? திராவிடத் தமிழர் காசில கல்லா கட்டிட்டு, தமிழர்கள் சுட்டுக் கொல்வதை பார்ப்பது 'போர்ர்ர்...' அடிக்குது போல தினமலருக்கு. பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தெரியாததால் ஒரு வேளை 'போர்ர்ர்...' அடிக்குதோ தினமலருக்கு? பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தை பார்த்து முதுகு சொரிந்துச் சிரிக்கலாம் என்று காத்திருந்ததோ தினமலர்ஒரு வேளை அதனால்'போர்ர்ர்...' அடிக்கிறாதோ

தினமலர் செய்தி : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற பெயரில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேனல் -4 என்ற தொலைக்காட்சி இன்று வெளியிட்ட வீடியோவில், ஏற்கனவே காட்டப்பட்ட விஷயங்களும், சில குண்டுவெடிப்புகளும், சில மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும் போன்ற காட்சிகளும், பிரபாகரன் மகன் இறந்து கிடக்கும் காட்சிகளும் இருந்ததே தவிர பெரும் அதிர்ச்சியை வெளிக்கொணரும் வகையில் எந்தவொரு காட்சிகளும் இதில் இடம் பெறவில்லை.
பதில் கருத்து : ரொம்ப நன்னா இருக்குங்கானும் ... 'சில' குண்டு வெடிப்புகள் தானாங்கானும்; 'சில' மக்கள் மட்டும்தான் ரத்த வெள்ளத்தில் கிடந்தாங்களாங்கானும். 'பெரும்அதிர்ச்சியை' வெளிக்கொணரும் எந்த காட்சியும் இல்லையாங்கானும். பேஷ் .. பேஷ்... ஷேமம்... தினமலரின் தமிழர் சேவை வாழ்க :( :( :( :( :(


தினமலர் செய்தி : குறிப்பாக புலித்தலைவர் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார், எவ்வளவு தூரம் கொடுமை படுத்தப்பட்டார் என்ற விவரம் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது
பதில் கருத்து : என்னே ஆவல் தினமலருக்கு..... ஏங்கானுனும்.. உமக்கு ஏங்கானும் தமிழீல விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டார்களா  இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு ஆவல் ? வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் வேலியைப் பற்றி பச்சோந்திக்கு என்ன பச்சாதாபம்



தினமலருக்கு 'மனுதர்மம்' (மனு சாஸ்திரம், மனு நீதி) ஒரு சிறந்த வாழ்வியல் நூல். 'அவாள்' ஏடு எதை எழுதினாலும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் இன்னும்.  
எப்படிப்பட்ட தமிழர்கள்? தன் மேல் 'சூத்திரன்' எனும் பட்டம் தொங்குவதைக் கூட தெரியாத உணராத தமிழர்கள்.

தமிழர்கள், எந்த பொதுப் பிரச்சினையிலும் ஒன்றினைந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு கரிசனம் இந்த 'தினமலர்களுக்கு' ! :( :( :( :( :(


உண்மையுடன்
வேதனையுடன்
திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து
லண்டன்



2 comments:

  1. தமிழனுக்கு எதிரான ஒரு பத்திரிகை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழனைப் பற்றி குறை கூறிக் கொண்டு அதை தமிழனிடமே விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதை காசு கொடுத்து வாங்கிப் படிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் தமிழர்களால்தான்... தமிழனே... தமிழனை அழிப்பதற்கு உரியவற்றை வளர்ப்பான் என்பதற்கு தினமலை காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒவ்வொரு ஈனர்களும் சாட்சி...

    ReplyDelete